சுட்டிக் குரங்கின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. கற்பனை செய்யவே முடியாத சில காட்சிகளை இவற்றில் காண்கிறோம். இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப கலாங்களில் இவை பட்டையை கிளப்பி வருகின்றன. நாம் அருகில் நின்று காண முடியாத சில அரிய காட்சிகளை இந்த வீடியோக்களில் காண முடிகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது சுட்டிக் குரங்கு தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காண்பதற்கு அரிதான ஒரு காட்சி காணக்கிடைக்கிறது. குரங்கு ஒன்று வேக வேகமாக காரை கழுவுகிறது. பொதுவாக குரங்குகள் மிகவும் குறும்புத்தனமான விலங்குகள். என்ன தான் குறும்புகள் செய்தாலும், இவை புத்திசாலி மிருகங்களாக கருதப்படுகின்றன. தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவை பார்த்தால் நிச்சயம் இன்ப அதிர்ச்சி அடைவீர்கள்.


மேலும் படிக்க | கடவுளே! மொட்டை மாடியில் செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 


காரைத் துடைக்கும் குரங்கு
வைரலாகி வரும் இந்த வீடியோவில், குரங்கு செல்லப் பிராணி என்பதும், சில தவறுகளுக்கு தண்டனை பெற்றிருப்பதும் தெரிந்தது. அந்தக் குரங்கு அவசர அவசரமாக காரை துடைப்பதை நாம் காணலாம். கையில் துணி வைத்து மனிதர்களை போல வேலை செய்கிறது. அந்தக் குரங்கு இப்படி க்யூட்டாக கார் துடைக்கும் வேலையில் ஈடுபடும் வீடியோ இன்ஸ்டாவில் பல்லாயிரம் லைக்ஸ்களைக் கடந்து இன்ஸ்டாவாசிகளின் இதயங்களை அள்ளி வருகிறது.


குரங்கின் லூட்டியை இந்த வீடியோவில் காணுங்கள்:



இந்த வீடியோவும் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி நெட்டிசன்களின் ஜாலியான கமெண்டுகளையும் பெற்று வருகிறது. மேலும் குரங்கின் இந்த வீடியோ ____arun____520 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | நாய்யிடம் அடாவடி செய்த குசும்புக்கார குரங்குகள்: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ