நாய்யிடம் அடாவடி செய்த குசும்புக்கார குரங்குகள்: வீடியோ வைரல்

Monkey Viral Video: தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், குரங்ககள் எப்படி சேட்டை நாய்யிடம் செட்டை செய்கிறது என்பதை நாம் காணலாம். இதில் நாய் ஒன்றை குரங்குகள் படுத்தும் பாட்டை பார்த்தால் நமக்கே கடுப்பாகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 15, 2023, 04:32 PM IST
  • நாயை வம்புக்கிழுத்த குரங்குகள்.]
  • சிரிப்பை அடக்க முடியாது.
  • இன்றைய வைரல் வீடியோ.
நாய்யிடம் அடாவடி செய்த குசும்புக்கார குரங்குகள்: வீடியோ வைரல் title=

குரங்கு மற்றும் நாயின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஒரு ஆச்சரியமான உலகமாக இருக்கிறது. இங்கே நாம் காணும் பல விஷயங்களை நம்மால் நம்ம கூட முடியாது. பொதுவாக நாம் இணையத்தில் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கும, சில சமயம் சிந்திக்க வைக்கும், சில சமயம் ஆச்சரியப்பட வைக்கும, அதேபோல் சில சமயங்களில் அதிர்ச்சியை தரும். அதிலும் இந்த இணைய உலகத்தில் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு இருக்கிறது.

அந்த வகையில் சுவாரஸ்யமான இணைய உலகமான சமூக ஊடகங்களில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் சமூக ஊடக உலகில் தினம் தினம் பகிரப்பட்டு வருகின்றன. அதிலும் குறும்புக்கார குரங்கு வீடியோக்கள் சமீப காலமாக அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. மேலும் இந்த சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அதேபோல் இந்த வீடியோ நிச்சயம் உங்களை சிரிக்க வைக்கும்.

மேலும் படிக்க | ‘ஏய்... அடங்க மாட்டீங்களா’: அடித்துக்கொள்ளும் எலியும் பூனையும், பிடித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்!!

இதுவரை நாம் குரங்குகள் மனிதர்களைத் துன்புறுத்தும் பல வீடியோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் குரங்குகள் நாயை தொல்லை செய்வதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இங்கே ஒரு நாய் நின்றிருக்கும் நேரத்தில் மூன்று குரங்குகள் அங்கு வந்து அந்த நாயை பாடாய் படுத்துகிறது. இந்த வீடியோ அனைத்து சமூக ஊடக தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. அந்த குரங்குகள் அந்த நாயின் வாலை இழுத்து இழுத்து வம்பு பண்ணுகிறது, இறுதியாக கடுப்பான அந்த நாய் அந்த குரங்கு குட்டிகளை கடிக்க முயற்சிக்கிறது. ஆனால் அந்த குரங்குகள் அசைந்துகொடுப்பதாக இல்லை. அது மீண்டும் மீண்டும் குரங்குக்கு தொல்லை அளிக்கின்றது. 

குரங்கின் வீடியோவை இங்கே பாருங்கள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

குரங்குகள் நாயை தொந்தரவு செய்யும் இந்த வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பார்க்கப்படுகிறது. இது இன்ஸ்டாகிராமில் ____arun____520 என்ற பக்கத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | முதலை போட்ட ஸ்கெட்சில் தப்பித்த மான்; வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News