காட்டில் கேக் வெட்டிய நபர், அபேஸ் செய்த குரங்கு: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ
Funny Viral Video: பிறந்தநாள் கொண்டாட காட்டுக்கு சென்ற நபருக்கு வந்தது சோதனை. அழையா விருந்தாளியாக வந்த குரங்கு செய்த செயலை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிலர் சில சமயம் தங்கள் சாகசத்தை காட்ட செய்யும் சில செயல்கள் சொதப்பி விடுவதுண்டு. சில வேடிக்கைகள் வேடிக்கையாக இல்லாமல் விபரீதமாவதும் உண்டு. அப்படி பல சம்பவங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றை பார்த்தால் நமக்கு சிரிப்பு வருவதோடு, அந்த நபர்கள் மீது பரிதாபமும் ஏற்படுகின்றது.
அப்படிப்பட்ட ஒரு நபரின் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இவர் தனது பிறந்தநாளை கொண்டாட தனது நண்பர்களுடன் ஒரு காட்டுக்குள் வருகிறார். பிறந்தநாளில் வெட்ட ஒரு கேக்கையும் அவர்கள் தங்களுடன் எடுத்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பாராத ஒரு விஷயம் அங்கு நடக்கிறது. இது அவர்களை மட்டுமல்ல, வீடியோவை காணும் நம்மையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
மேலும் படிக்க | கீரிக்கும் பாம்புக்கும் பயங்கர சண்டை: நம்ப முடியாத முடிவு, வைரல் வீடியோ
பிறந்தநாள் கொண்டாடிய நபருக்கு கிடைத்த ஆதிர்ச்சி
தனது பிறந்தநாளை கொண்டாட காட்டுக்குள் வந்த நபர், தண்ணீருக்கு நடுவில் இருக்கும் கற்களில் வைத்து கேக்கை வெட்டத் தொடங்குவதை வீடியோவில் காண முடிகின்றது. அந்த நபர் மகிழ்ச்சியாக பிறந்தநாளை கொண்டாட, அவர் கேக் வெட்டும்போது அவரது நபர்கள் அவருக்காக பிறந்தநாள் பாடலை பாடுகிறார்கள். கேக்கை கட் செய்து, ஒரு கேக் துண்டை எடுத்து அவர் நண்பருக்கு ஊட்டத் தொடங்குகிறார். அப்போது எங்கிருந்தோ ஒரு குரங்கு திடீரென்று அங்கு வருகிறது. யாரும் பார்க்காத வண்ணம் அது ஒரே நொடியில் அந்த கேக்கை லாவகமாக தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது. கேக்கை கீழே விழாத படி அழகாக கவனமாக பிடித்துக்கொண்டு குரங்கு மரத்தின் மீது வேகமாக ஏறி விடுகிறது.
குரங்கு கேக்குடன் மரத்தில் ஏறும் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ ட்விட்டரில் @Wtfmomentes என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சிலர் குரங்கை பாராட்டுகிறார்கள். சிலரோ இளைஞனுக்காக வருத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க |
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ