பானிபூரி சாப்பிடும் குரங்கின் வீடியோ: பானிபூரி பிடிக்காதவர்கள்  இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். ஆம், பானிபூரியின் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பானிபூரி சாப்பிடுபவர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதற்கு இதுதான் முக்கிய காரணம். அந்தவகையில் இந்த தற்போது வைரலாகி வரும் வீடியோவில் குரங்கு ஒன்று மகிழ்ச்சியுடன் பானிபூரியை ரசித்து ருசித்து சாப்பிவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லை என்றால் சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவை பாருங்கள், ஏனெனில் இந்த வீடியோ இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்னதாக பசுவும், கன்றும் பானிபூரி சாப்பிடும் வீடியோவை நாம் சமூக வலைதளங்களில் பாரத்துள்ளோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் குஜராத்தின் மோர்பியில் நடந்துள்ளது
48 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு குரங்கு வண்டியில் அமர்ந்து பானிபூரியை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதைக் காணலாம். உண்மையில் என்ன நடந்தது என்றால், அந்த குரங்கு திடீரென பானிபூரி வண்டியில் வந்து அமர்ந்தது. அப்படிப்பட்ட நிலையில், கடைக்காரர் அந்த குரங்கை விரட்டாமல், ஒரு தட்டில் கொஞ்சம் பானிபூரிக்களை எடுத்து அதற்கு தருகிறார். அதன் பின்... குரங்கு கைவண்டியில் அமர்ந்து பானிபூரியை ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் குரங்கு பானிபூரி சாப்பிடுவதைப் பார்க்க வண்டியைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடினர். இறுதியில் கூட்டத்தைக் கண்டு கோபமடைந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த வைரல் வீடியோ கடந்த ஜூன் 20 ஆம் தேதி அன்று 'அப்தக் மீடியா' என்கிற யூடியூப் பக்கத்தில் முதல் முறையாக வெளியிடப்பட்டது, மேலும் இந்த வைரல் சம்பவம் குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. தங்கராவில் உள்ள தயானந்த் சவுக்கில் நடமாடும் பானிபூரி கடையில் சாம்பல் லங்கூர் குரங்கு ஒன்று வந்தது. பானிபூரி விற்பவர் குரங்குக்கு ஒரு தட்டில் பானிபூரி கொடுத்தார். குரங்கு கடை மீது ஸ்டைலாக அமர்ந்துகொண்டு, அவற்றை ருசித்து விரும்பி சாப்பிட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. மேலும் டிரெண்ட் ஆகி வருகின்றது.


குரங்கு பானிபூரி சாப்பிடும் வீடியோவை இங்கே காணுங்கள்:



முன்னதாக பசு-கன்றுக்குட்டி பானிபூரி சாப்பிடும் வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வெகுவாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ சமூக ஊடக தளமான டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ