போதை, ஆவேசம், பெண்களிடம் அநாகரீகம்: குரங்குக்கு கிடைத்தது ஆயுள் தண்டனை
Trending News: பெண்களைப் பார்த்தவுடன் வினோதமான அநாகரீகமான சைகைகளை செய்துவிட்டு, ஏதோ முணுமுணுப்பதும் அந்த குரங்கின் பழக்கங்களில் ஒன்று.
அதிசய குரங்கு: விலங்குகளின் விசித்திரமான செயல்கள் மற்றும் அவற்றின் தாக்குதல்கள் பற்றி உலகின் பல இடங்களிலிருந்து வரும் பல கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த பதிவில் நாம் காணப்போகும் செய்தி இவை அனைத்திலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. பொதுவாகவே குரங்குகள் அதிகமாக சில்மிஷம் செய்யும் விலங்காக, குறும்பு செய்யும் மிருகமாக பார்க்கபடுகின்றது. ஆனால், அதன் செயல்கள் பல முறை பலருக்கு ஏகப்பட்ட ஆபத்துகளையும் விளைவித்துள்ளன.
குரங்கின் பிடியில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பலர் இறந்த சமபவங்கள் பற்றியும் நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஏகப்பட்ட குறும்புத்தனத்துடன் கொடூரமாக நடந்துகொண்ட ஒரு குரங்கு தற்போது கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? இது உண்மைதான்!! குரங்குக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் இந்த வழக்கு தனித்துவமாக மாறியுள்ளது. இந்த குரங்கின் பெயர் காலியா. காலியா மிர்சாபூரிலிருந்து பிடிபட்டு கான்பூருக்குக் கொண்டுவரப்பட்டது.
இதன் சில்மிஷங்களை கேட்டால் ஆடிப்போவீர்கள்
காலியா குறித்து மிர்சாபூர் மக்களிடையே எப்போதும் அச்சம் நிலவி வந்தது. காலியா இதுவரை 250- க்கும் மேற்பட்டவர்களை தாக்கி காயப்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து வனத்துறை அந்த குரங்குக்கு மனிதர்களுக்கு வழங்குவதை போன்ற தண்டனையை வழங்கியது. கான்பூரில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள கூண்டில் காலியா வைக்கப்பட்டது.
காலியா குறிப்பாக குழந்தைகளையும் பெண்களையும் அதன் இலக்காக்கியது. அதைப் பிடிக்கும் துணிச்சலை கான்பூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் டாக்டர் முகமது நசீர் காட்டினார். இந்த குரங்கு மிருகக்காட்சிசாலையில் ஐந்து வருட சிறைத்தண்டனையை முடித்துவிட்டது. ஆனால் இப்போதும் அதன் நடத்தை முன்பு போலவே இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
மந்திரவாதியின் செல்லப்பிள்ளையாக இருந்தது
சில காலம் முன்னர் ஒரு மந்திரவாதி இந்த குரங்கை தனது வளர்ப்பு குரங்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த மந்திரவாதி காலியா குரங்குக்கு சாப்பிட இறைச்சியும் குடிக்க மதுவும் கொடுத்திருக்கிறார். அன்றிலிருந்து அது மதுவிற்கு அடிமையாகி விட்டது. காலியா குரங்கு அனைவரையும் தாக்குவதற்கு அதன் உணவு மற்றும் மதுபானங்களுக்கான பழக்கமும் ஒரு மிகப்பெரிய காரணம் என டாக்டர் நசீர் கூறினார்.
பெண்களைப் பார்த்தவுடன் வினோதமான அநாகரீகமான சைகைகளை செய்துவிட்டு, ஏதோ முணுமுணுப்பதும் அந்த குரங்கின் பழக்கங்களில் ஒன்று. இதையடுத்து, அது அவர்களை தாக்கி காயப்படுத்துவதும் வழக்கம். மந்திரவாதியின் மரணத்திற்குப் பிறகு, அது மக்களை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கியது. அந்த குரங்கு யாரைத் தாக்கினாலும், அந்த நபரின் சதையின் பெரும் பகுதியைக் கிழித்து உடலிலிருந்து பிரித்து எடுத்து விடுகிறது என மக்கள் கூறினார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ