சைட் டிஷ்ஷுடன் சரக்கடிக்கும் குரங்கு: நம்ப முடியாமல் வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

Funny Monkey Video: இந்த வீடியோவை பார்த்தால் யாராலும் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது. இதில் குரங்கு ஒன்று மதுபானம் உட்கொண்டு அதற்கு சைடு டிஷ்ஷாக சிப்ஸையும் சாப்பிடுவதை பார்க்க முடிகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 18, 2022, 12:09 PM IST
  • குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவதை பார்த்துள்ளோம்.
  • குரங்குகள் செய்யும் சேட்டையின் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
  • சிலவற்றை பார்த்து பயனர்கள் நம்ப முடியாமல் அதிர்ச்சியடைகின்றன.
சைட் டிஷ்ஷுடன் சரக்கடிக்கும் குரங்கு: நம்ப முடியாமல் வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்குகள் இந்த கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். குரங்கிலிருந்து மனிதர்களாகிய நாம் வந்தோம். குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவதை பார்த்துள்ளோம்.  குரங்குகள் செய்யும் சேட்டையின் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. சிலவற்றை பார்த்து பயனர்கள் நம்ப முடியாமல் அதிர்ச்சியடைகின்றன. தற்போதும் இதுபோன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. 

இந்த வீடியோவை பார்த்தால் யாராலும் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது. இதில் குரங்கு ஒன்று மதுபானம் உட்கொண்டு அதற்கு சைடு டிஷ்ஷாக சிப்ஸையும் சாப்பிடுவதை பார்க்க முடிகின்றது. 

எமக்கு கிடைத்த தகவல்களின் படி, இந்த வீடியோ மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள கரைரா பாஸ் கிராமத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக குரங்குகள் மக்களை தொந்தரவு செய்து வருகின்றன. இந்த குரங்கு அங்குள்ள மக்களுக்கு இடையூறாக மாறியுள்ளது. சாலையில் செல்பவர்களை குறிவைத்து, பாதசாரிகள் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அனைவரையும் இது தாக்கி வருகின்றனர். 

மேலும் படிக்க | ‘ஏய்...இது என் ஏரியா..ஓடிப்போயிடு’: பெண்ணை துரத்திய குரங்கின் வைரல் வீடியோ 

அதிலும் வீடியோவில் உள்ள குரங்கு செய்யும் சேட்டைகள் மிகவும் அதிகமாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றன. இந்த குரங்கை மக்கள் பைத்தியக்கார குரங்கு என அழைக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர், ஓர் இடத்தில் சிலர் மதுபானம் அருந்திகொண்டிருந்தபோது, இந்த குரங்கு அங்கு சென்றது. அதைப் பார்த்த அனைவரும் அங்கிருந்து ஓடிச்சென்றனர். 

மக்கள் ஓடிய பிறகு, குரங்கு கிளாசை எடுத்து, மதுவை உறிஞ்சி, பின்னர் சிப்ஸ் பாக்கெட்டை கிழித்து, சிப்ஸையும் எடுத்து சாப்பிட்டது. இந்த சம்பவத்தை அங்கிருந்த நேரில் பார்த்தவர்கள் தங்கள் கேமராவில் படம் பிடித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குரங்கின் லூட்டி வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ பல சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதனை பயனர்கள் வைரல் ஆக்கியுள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். சிலர் இதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டாலும், சிலர் இதற்கு கடுமையான விமர்சனங்களையும் அளித்து வருகின்றனர். 

‘போதைப்பழக்கம், குடிப்பழக்கம்...இவை எல்லாம் குரங்குகளையும் விட்டு வைக்கவில்லையா’ என ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ‘மனிதர்கள் இதையும் குரங்குகளுக்கு கற்றுக்கொடுத்து விட்டார்கள்’ என ஒரு பயனர் தனது கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

மேலும் படிக்க | சிங்கக்குட்டியை பிளான் போட்டு கடத்திய குரங்குகள்: சினிமாவை மிஞ்சும் சீன், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News