டெல்லி மெட்ரோவில் இன்று காலை குரங்கு ஒன்று புகுந்தது பயணிகளுடன் பயணித்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி மெட்ரோவில் பிங்க் லைனில் அமைந்துள்ள புதிய ஆஸாத்புர் மெட்ரோ நிலையத்தில் காலை 11:30 மணியளவில் குரங்கு மெட்ரோவினுள் நுழைந்தது. இந்த புதிய ரெயில் நிலைய கட்டிடம் பூமிக்கு அடியில் அமைந்துள்ளதுடன், பழைய ரெயில் நிலையத்துடன் இணைக்கும் வகையிலான வசதியையும் கொண்டது.


திடீரென மெட்ரோவினுள் குரங்கு நுழைந்ததால் பயணிகள் அச்சத்தில் ஆழ்ந்தனர். எனினும் பயணிகள் அசம்பாவிதம் ஏதும் மேற்கொள்ளாமல் பொருமையாக மெட்ரோவில் அமர்ந்திருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


டெல்லி மெட்ரோவின் பிங்க் லைன் ஆனது தற்போது டெல்லியின் மஜ்லிஸ் பார்க் மற்றும் தெற்கு டெல்லியின் லஜ்பத் நகர் வரையிலான இடங்களை இணைக்கிறது.


இந்த லைனில் இடம்பெற்றுள்ள ஆசுத்பூரா மக்கள்தொகை அதிகம் கொண்ட பகுதியாகும். விவசாய மக்கள் அதிகம் தங்கியுள்ள இப்பகுதியில் மிகப்பெரிய காய்கறி மண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.



தற்செயலாக, கடந்த ஆண்டு செப்டம்பரில், இதேப்போன்ற சம்பவம் இந்த மெட்ரோ சேவையில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது குரங்கு ஒன்று மெட்ரோ நிலையத்தில் காத்திருந்து மெட்ரோவில் ஏறி பயணித்தது. இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.