அட்ரா சக்க.. என்னமா நீச்சல் அடிக்குது இந்த குரங்கு: வைரல் வீடியோ
Monkey Viral Video: குரங்குகள் தண்ணீரில் நீந்துவதைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இங்கே காணுங்கள்.
குரங்கின் இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம். ஒரு சமயம் அமைதியாக இருக்கும் இவை அடுத்த கணமே அட்டகாசம் செய்யத் துவங்கிவிடும். அதனால்தான் அடிக்கடி தன் கருத்தை மாறி மாறி கூறுபவர்களை குரங்கு புத்தி என கூறுகின்றனர்.
சாலைகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கும் அளவில்லை. சாலையில் நடந்து செல்பவர்களின் பொருட்களை பிடுங்குவது, வழிப்போக்கர்களின் தோளில் சென்று அமர்வது, அவர்கது முடியை பிடித்து இழுப்பது என இவை பல வழிகளில் மக்களை தொந்தரவு செய்கின்றன. கோயில்களில் கூட குரங்குகளிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனினும், தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோ, சற்று வித்யாசமானது என்றே கூறலாம். இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இந்த வீடியோவில், நீங்கள் ஒரு அழகான தீவைக் காணலாம், அதைச் சுற்றி ஒரு அழகான காட்சியும் தெரியும். அதேசமயம் ஒருவர் படகில் அமர்ந்து வீடியோ எடுக்கிறார். ஒரு வேடிக்கையான விஷயம் அவரது கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் தண்ணீரில் நீந்தும் குரங்குகள் இடம்பெற்றுள்ளது. தண்ணீரில் ஒன்றல்ல இரண்டல்ல பல குரங்குகள் காணப்படுகின்றன. இந்த குரங்குகள் மிகவும் மகிழ்ந்து செல்வதை வீடியோவில் காணலாம். குரங்குகளின் இந்த வீடியோ அனைவராலும் விரும்பப்பட்டு வருவதுடன், சமூக வலைத்தள பயனாளிகளும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தண்ணீரில் நீந்தும் குரங்குகளின் வீடியோவை இங்கே காணுங்கள்:
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது, இது 'வைரல் ஹாக்' பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் ஈமோஜியைப் பகிர்வதன் மூலம் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வைரலான வீடியோவின் கருத்துகளைப் பற்றிப் பேசுகையில், ஒரு பயனர், 'இது குரங்குகளின் தீவாகத் தெரிகிறது' என்று கருத்து தெரிவித்துள்ளார், மற்றொரு பயனர், 'இந்த இடத்திற்குச் செல்வது ஆபத்து' என்று எழுதினார்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | முட்டையை அபேஸ் செய்ய வந்த பெண்: பின்னிப்பெடலெடுத்த தாய் மயில்..வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ