வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் பாம்பு, சிங்கம், புலி, குரங்கு, யானை ஆகிய மிருகங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்புகின்றன. இவற்றில் பாம்புகளின் வீடியோக்களுக்கும், குரங்குகளின் குறும்பு வீடியோக்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், பாம்பும் குரங்கும் ஒரே வீடியோவில் இருந்தால் அது வேற லெவல் அட்டகாசத்தை அளிக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. விலங்குகளின் சண்டையை காட்டும் பல வீடியோக்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன. தற்போதும் குரங்கு மற்றிம் பாம்பின் சண்டையை காட்டும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.


குரங்குக்கும் நாகப்பாம்புக்கும் இடையே நடக்கும் சண்டையின் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. குரங்கு ஒன்று கட்டப்பட்டிருப்பதையும் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. ஆனால், திடீரென்று சங்கிலியால் கட்டப்பட்ட நிலையிலும், குரங்கு பாம்பின் முன் குதித்து அதன் வாலை அசால்டாக இழுக்கிறது.


மேலும் படிக்க | முதலையிடம் வசமாய் மாட்டிக்கொண்ட நாய்..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல் 


பின் குரங்கு அந்த பாம்பை பாடாய் படுத்துகிறது. ஆனால் குரங்கு நாகப்பாம்பை எவ்வளவு சீண்டினாலும், மிகவும் ஆச்சரியமான வகையில், பாம்பு அதை ஒன்றும் செய்யவில்லை. இது நிஜமாகவே மிகவும் அதிசயமாக உள்ளது. வீடியோவின் இறுதியில் மற்றொரு நாகப்பாம்பும் அங்கு இருப்பது தெரிகிறது. 


வியக்க வைக்கும் பாம்பு-குரங்கு வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் beautiful_new_pix என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள்  இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


மேலும் படிக்க | படுவேகமாக வந்த பாம்பு, தப்பித்ததா குழந்தை? பதறவைக்கும் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ