வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்கு உலகில் மிகவும் கவர்ச்சிகரமான உயிரினங்களில் ஒன்று குரங்கு. அவை மனிதர்கள் செய்யும் செயல்களை அப்படியே செய்வதில் வல்லமை படைத்தவை. இவற்றின் குறும்புத்தனத்துக்கு அளவே இல்லை. இவற்றின் குறும்புகள் பற்றிய பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளன. 


ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் குரங்குகள் மீது அதிக ஆராய்ச்சி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் அவை மேம்பட்ட சமூக தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு திறன் கொண்ட அறிவார்ந்த விலங்குகளாகும். சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 


மேலும் படிக்க | Viral Video: 100 கிலோ மலைப்பாம்பை தோளில் சுமந்த நபர், கடுப்பில் வாயை பிளந்த Python


புனித நகரமான அயோத்தியில் உள்ள ஒரு கோவிலில் குரங்கு ஒன்று கடவுளின் ஆசீர்வாதத்தை பெற வருவது போன்ற ஒரு ஒரு பழைய வீடியோ சமீபத்தில் ஆன்லைனில் புதிய ஈர்ப்பைப் பெற்றுள்ளது. தற்போது புனித நகரமான அயோத்தியில் உள்ள கோவிலுக்கு குரங்கு ஒன்று சென்று கடவுளை வணங்கி ஆசிர்வாதம் வாங்கும் பழைய வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது. 


குரங்கின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த காட்சியை எடுத்த நபர், ‘குரங்கு தினமும் இரவில் வெகுநேரம் கோவிலுக்கு வரும். குரங்கு படிக்கட்டுகளில் ஏறி, கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற வணங்குவதைப் பார்ப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.’ என்று கூறியுள்ளார்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. குரங்கின் செயல் மிக கியூட்டாக உள்ளது, இது இணையவாசிகளின் உள்ளங்களை கவர்ந்துள்ளது. 


இந்த கிளிப் ட்விட்டரில் சாத்விக் சோல் என்ற பயனரால் பகிரப்பட்டது. இந்த வீடியோவுக்கு இதுவரை ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


"இதை பார்த்து மனம் மகிழ்ச்சி அடைந்தது” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘மிருகங்களுக்கு இத்தனை பக்தி இருப்பது ஆச்சரியமாக உள்ளது’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். 


மேலும் படிக்க | Viral Video: 200 கிலோ ராட்சத மலைப்பாம்புகளின் வாலை பிடித்து இழுத்த நபர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ