Viral Video: 100 கிலோ மலைப்பாம்பை தோளில் சுமந்த நபர், கடுப்பில் வாயை பிளந்த Python

Python Viral Video: ஒருவர் தனது மலைப்பாம்பை தோளில் சுமந்து கொண்டு செல்வதை எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? அல்லது கேள்வி பட்டதுண்டா? சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் இது போன்ற ஒரு காட்சி பதிவாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 16, 2023, 12:51 PM IST
  • மலைப்பாம்புடன் நட்பு கொண்ட நபர்.
  • வாயைப் பிளந்த மலைப்பாம்பு.
  • இன்றைய வைரல் வீடியோ.
Viral Video: 100 கிலோ மலைப்பாம்பை தோளில் சுமந்த நபர், கடுப்பில் வாயை பிளந்த Python title=

மலைப்பாம்பு வீடியோ: பாம்பின் பெயரைக் கேட்டாலே பலருக்கு படையே நடுங்கும். அது ராட்சத பாம்பு என சொன்னால் கேட்கவே வேண்டாம். ராட்சத பாம்பு மிகவும் ஆபத்தான பாம்பு இனமாகும். ஏனெனில் ராட்சஸ பாம்பு தனது விஷத்தை பரப்பி மற்ற பாம்புகளை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டது. அத்தகைய சூழ்நிலையில், ஒருவர் தனது மலைப்பாம்பை தோளில் சுமந்து கொண்டு செல்வதை எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? அல்லது கேள்வி பட்டதுண்டா? சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில் இதேபோன்ற ஒரு காட்சி ஒன்று பதிவாகியுள்ளது, அதில் ஒரு நபர் மலைப்பாம்பை எப்படி கையாளுகிறார் என்பதை காணலாம்.

வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jay Brewer (@jayprehistoricpets)

மேலும் படிக்க | Viral Video: 200 கிலோ ராட்சத மலைப்பாம்புகளின் வாலை பிடித்து இழுத்த நபர்

மலைப்பாம்புடன் நட்பு
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவில், ஒருவர் ராட்சத மலைப்பாம்பை தோளில் சுமந்து செல்வதைக் காணலாம். மலைப்பாம்பு இந்த மனிதனுக்கு தீங்கு விளைவிக்கவில்லை, ஆனால் இருவரும் ஆழமான நட்பைக் கொண்டிருப்பது நாம் வீடியோவில் காணலாம். மலைப்பாம்பை தோளில் சுமந்தவர் சத்தமாகச் சிரிப்பதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம். மேலும் அந்த மலைப்பாம்பு விழுங்கப் போவது போல் வாயைத் திறக்கிறது, ஆனால் இந்த நபர் அதைப் பொருட்படுத்தவில்லை. கிடுகிடுக்க வைக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

4 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது. இந்த வீடியோவுக்கு இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகள் வந்துள்ளன. அதிர்ச்சியடைந்த பல இணைய பயனர்கள் இந்த வீடியோவுக்கு பல வித கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கமான @jayprehistoricpets இல் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: பள்ளி வகுப்பறையில் காதலை சொன்ன மாணவன்... மாணவியின் பதிலை பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News