வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்குகள் பலவிதமான குறும்பு செய்வதை நாம் பார்த்துள்ளோம். சமூக ஊடகங்களில் இதைப் பற்றிய பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகள் குறும்புக்கார விலங்குகள் என்றால், சிறுத்தை, புலி, சிங்கம் போன்றவை வேட்டைக்கார விலங்குகள். சிறுத்தை தரையில் வேட்டையாடுவது மட்டுமின்றி, தண்ணீரில் குதித்தும் உயிரினங்களை வேட்டையாடுகின்றன. 


எனினும், இந்த முறை மிகவும் வித்தியாசமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று குரங்குகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு பாடுபடுவதை காண முடிகின்றது.  வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆற்றங்கரையில் சிறுத்தை ஒன்று தண்ணீர் குடிக்க வருவதை காண முடிகின்றது. ஆனால், அந்த இடத்தில் ஏற்கனவே குரங்குகளின் படை ஒன்று உள்ளது. அதன் பிறகு நாம் வீடியோவில் காணும் காட்சிகளை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. 


மேலும் படிக்க | பாம்பை பதம் பார்த்த நாய்: வயலில் வேற லெவல் சண்டை, பகீர் வைரல் வீடியோ 


சிறுத்தைக்கு பாடம் கற்பித்த குரங்குகள் 


வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆற்றங்கரையில் குரங்கு படை இருப்பதை பார்க்க முடிகிறது. அங்கு ஒரு சிறுத்தை வேட்டையாடும் நோக்கத்திலோ அல்லது தண்ணீர் குடிக்கும் நோக்கத்திலோ வருகிறது. எனினும், குரங்குகள் தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றன என்பதை அது உணர்கிறது. சந்தர்ப்பம் பார்த்து, குரங்குகளின் கைகளில் பிடிபடாமல் அது ஓடத் தொடங்குகிறது. ஆனால் குறும்புக்கார குரங்கு கூட்டத்தின் சில குரங்குகளும் அதை பின் தொடர்ந்து ஓடுகின்றன. 


குரங்குகளின் குறும்பு வீடியோவை இங்கே காணலாம் 



சிறுத்தையை கண்டு மற்ற உயிரினங்கள் பயப்படுவதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆனால், சிறுத்தையே இப்படி அஞ்சி ஓடுவதை பார்த்திருக்க மாட்டோம். இந்த வீடியோவில் அந்த அரிய காட்சி காணக்கிடைக்கிறது. 


இந்த வீடியோ waowafrica என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.  இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | காட்டு எருமைகளின் பிடியில் சிக்கிய சிங்கம்: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ