Dog Baby Shower Video: செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கும் இளம்பெண் வீடியோ வைரல்

Dog Baby Shower Video: மாறும் காலங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஆச்சரியம் அளிக்கிறது. செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கும் இளம்பெண் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 12, 2022, 04:29 PM IST
  • செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கும் இளம்பெண்
  • மாறும் காலங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் அளிக்கும் ஆச்சரியம்
  • சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ
Dog Baby Shower Video: செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கும் இளம்பெண் வீடியோ வைரல் title=

Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருந்தாலும், அது ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

விலங்குகளின் வீடியோக்களை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும் வித்தியாசமான வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

செல்லப்பிராணிகளை தங்கள் குழந்தைகளைப் போலவே நடத்தும் காலம் இது. குடும்ப உறுப்பினருக்கு கொடுக்கும் அதே அன்பையும் மரியாதையையும் அரவணைப்பையும் இன்று செல்லப்பிராணிகளுக்கும் கொடுக்கிறார்கள். மாறும் காலங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஆச்சரியம் அளிக்கிறது. செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கும் இளம்பெண் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

மேலும் படிக்க | Dangerous Kiss: முத்தத்தில் எத்தனை வகை இருந்தாலும் இந்த கிஸ் கொஞ்சம் டேஞ்சர் தான்

சுஜாதா பாரதி என்ற இளம்பெண், தனது வீட்டில் நாய்க்குட்டியை வளர்த்து வ்ருகிறார். நாய் கர்ப்பமாக இருந்ததை தெரிந்துக் கொண்ட சுஜாதா எடுத்த முடிவு ஆச்சரியம் அளிக்கிறது.தனது மகள் கர்ப்பமாக இருந்தால், என்ன செய்வோமோ, அதை ஏன் நமது செல்லக்குட்டிகளுக்கும் செய்யக்கூடாது என்று அவர் கேட்டிருக்கிறார்.

செல்ல நாயின் உரிமையாளர் சுஜாதா பாரதி இன்ஸ்டாகிராமில், வளைகாப்பு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்: “என் அழகிய செல்லத்துக்கு வளைகாப்பு” என்று எழுதியுள்ளார்.

அந்த வீடியோ இது... 

 

சுஜாதாவின் நாய்க்குட்டி வளைகாப்பு வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்தனர், இன்று தாங்கள் பார்த்த இனிமையான வீடியோ என்று கூறி அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். பலராலும் பார்க்கப்படும் இந்த வீடியோ இணையத்டில் பரவலாக வைரலாகிறது.

“நான் பார்த்ததிலேயே மிகவும் இனிமையான விஷயம். கடவுள் உங்களையும் உங்கள் குழந்தையையும் ஆசீர்வதிப்பாராக” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். "இது இன்ஸ்டாகிராமில் இன்று சிறந்த விஷயம்" என்று மற்றொரு பயனர் எழுதினார். "இன்று நான் இணையத்தில் பார்த்த சிறந்த விஷயம், வளைகாப்பில் உங்கள் அன்புக்குரிய நாய்க்குட்டி மிகவும் வெட்கப்படுகிறது... கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்" என்று மற்றுமொரு பயனர் எழுதினார்.

மேலும் படிக்க | நாங்களும் வாசிப்போம்ல, டிரம்ஸ் வாசிக்கும் யானை: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News