வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்குகள் இந்த கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். குரங்கிலிருந்து மனிதர்களாகிய நாம் வந்தோம். குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவதை பார்த்துள்ளோம்.  குரங்குகள் செய்யும் சேட்டையின் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. சிலவற்றை பார்த்து பயனர்கள் நம்ப முடியாமல் அதிர்ச்சியடைகின்றன. தற்போதும் இதுபோன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. 


ஆச்சரியமளிக்கும் இந்த வீடியோவில், குரங்குகளின் கூட்டம் ஒன்று திட்டம் தீட்டி சிங்கக்குட்டியை கடத்தி செல்வதை காண முடிகின்றது. 


மேலும் படிக்க | அசால்டா எஸ்கேப் ஆன ஆமை, முழிக்கும் முதலை: பாடம் புகட்டும் வைரல் வீடியோ 


சிங்கக்குட்டியுடன் மரத்தில் ஏறிய குரங்கு 


காட்டு விலங்குகள் தொடர்பான இந்தக் வீடியோவில், குரங்குகளின் கூட்டம் ஒன்று சேர்ந்து சிங்கத்தின் குட்டியை கடத்த திட்டமிடுவதை காண முடிகிறது. அந்த குட்டியை தூக்கி தங்கள் பிளானை குரங்குகள் நிறைவேற்றுகின்றன. சிங்கக்குட்டியை வைத்துக்கொண்டு குரங்குகள் இங்கும் அங்கும் ஓடுவதை வீடியோவில் காண முடிகின்றது. குட்டியை கடத்தி விட்டோம், இனி எங்கு மறைத்து வைப்பது என தவிப்பது போல குரங்குகள் பரபரப்பாக செயல்படுகின்றன. இந்தக் காட்சியைப் பார்த்த சிங்கமும் ஒரு கணம் அதிர்ந்து போனது. 


குரங்குகள் சிங்கக்குட்டியை கிட்னேப் செய்த வீடியோவை இங்கே காணலாம்: 



குரங்குகளின் சேட்டை தொடர்பான இந்த வீடியோ twfeq என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வேடிக்கையான இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


‘இந்த குரங்குகள் பட்டையை கிளப்பி விட்டன’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘இதைப் பார்த்து எனக்கு சிங்கத்திற்காக வருத்தம் ஏற்படவில்லை. ஏனென்றால் அதுவும் இப்படித்தான் பிற விலங்குகளின் குட்டிகளை தூக்கிச்செல்கிறது’ என மற்றொரு பயனர் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


மேலும் படிக்க | ஸ்கூட்டி டயரில் மாட்டுக்கொண்ட குரங்கு..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ