ஸ்கூட்டி டயரில் மாட்டுக்கொண்ட குரங்கு..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் குரங்கு ஒன்று பைக்கின் டயரில் சிக்கிக் கொண்டு தவித்த வீடியோ வெளியாகியுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 9, 2022, 02:50 PM IST
  • பைக் டயரில் சிக்கிய குரங்கு.
  • அப்பகுதி மக்கள் உயிரைக் காப்பாற்றினர்.
  • இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன.
ஸ்கூட்டி டயரில் மாட்டுக்கொண்ட குரங்கு..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் உலகில் உள்ள மிகவும் அறிவார்ந்த உயிரினங்களில் ஒன்றாகும். இவற்றின் புத்திசாலித்தனத்தை எடுத்துக்காட்டும் பல வீடியோக்களை நாம் சமூக ஊடகங்களில் தினமும் காண்கிறோம். குரங்குகளின் பல வேடிக்கையான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன. சில நேரம் இவை வழிப்போக்கர்களை சீண்டுவதும், சில நேரம் குழந்தைகளுக்கு ஈடாக ஸ்மார்ட்போன்களில் விளையாடுவதும் காண்பவர்களை வியக்கவும் அதிசயிக்கவும் வைக்கின்றன. 

மேலும் படிக்க | சேவலை வம்பிழுத்ததால் வந்த சேதாரம்: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 

குரங்கு மீட்பு வைரல் வீடியோ
இந்நிலையில், இங்கு தற்போது உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் இருந்து குரங்கு ஒன்று பைக்கின் டயரில் சிக்கியது எப்படி என்று தெரியாமல், மாட்டிக்கொண்டு கதறி அழும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மக்களின் பார்வை அதன் மீது விழுந்ததால், அந்த குரங்குக்கு உதவ முன்வந்தனர். அப்பகுதி மக்கள், தங்களது புத்திசாலித்தனத்தை காட்டி, பைக் சக்கரத்தை திறந்து, குரங்கின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது, இதை ஷுபங்கர் மிஸ்ரா தனது ட்விட்டர் கணக்கிலிருந்து பகிர்ந்துள்ளார். மேலும் குரங்கின் உயிரை காப்பாற்றியவர்களை சமூக வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

வீடியோவை பார்க்கவும்-

மேலும் படிக்க | குரங்கை விழுங்கிய 10 அடி மலைப்பாம்பு: கிடுகிடிக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News