இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனியின் மகள் கொஞ்சி கொஞ்சி பேசுவார் என்பது தெரியும்... ஆனால் அவர் தமிழில் பேசுவார் என்பது தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தோனி-யின் மகள் ஜிவா தோனி சின்னதாக கை அசைத்தாலும் நெட்டீசன்கள் சும்மா விடுவதில்லை., இந்நிலையில் தற்போது அவர் தன் தந்தை தோனியுடன் தமிழில் பேசும் வீடியோ ஒன்று நெட்டீசன்கள் கையில் கிடைத்துள்ளது எனில்...?


ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரில் இருந்து அதிரடி நாயகன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு என்றாலே குடும்பத்தாருடன் நேரத்தினை செலவு செய்துவரும் தோனி, தற்போது தன் மகளுடன் நேரத்தினை செலவிட்டுள்ளார். இந்த தருணங்களின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



இந்த வீடியோவில் தோனி மற்றும் அவரது மகள் ஜிவா தோனி மழலை தமிழில் பேசியுள்ளனர். தனது தந்தையை பார்த்து 'எப்படி இருக்கீங்க' என்று ஜிவா கேட்க, அதற்கு தோனி 'நல்லா இருக்கேன்' என பதில் அளிக்கின்றார்.


இதைத்தொடர்ந்து ஜிவாவும் தோனியும் போஜ்பூரி மொழியில் பேசிக் கொண்டனர். இந்த வீடியோவை தமிழக ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.