சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே அமையும். அவர்கள் தங்களால் முடிந்தளவுக்கு காடு மேடு, ஆறு, சமவெளி, பனிமலை, பாலை வனம், கடல் பயணம், வெளிநாடு சுற்றுலா என அடுத்தடுத்து திட்டமிட்டு பயணித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களை பார்க்கும் நம்மை போன்றவர்களுக்கு பொறாமை இல்லை என்றால் தான் ஆச்சரியம். ஏனென்றால், அவர்கள் சென்று வந்த இடங்களை காட்டும்போது நாமும் இந்த இடத்துக்கு போக வேண்டும். அதற்கான வாய்ப்பு அமைவதில்லையே என்ற எண்ணம் எழும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: பறந்து சென்று பறவையை வேட்டையாடிய மீன் 


அதேநேரத்தில் அவர்கள் பயணித்து வந்த வீடியோவை பார்க்கும்போது ஒரு வகையான மன நிம்மதியும், நாமே சென்று வந்த திருப்தியும் கிடைக்கும். அப்படியான வீடியோக்கள் இணையத்திலும் நல்ல வரவேற்பை பெறும். இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ நாமக்கல் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. அங்கு இருக்கும் பிரபலமான சுற்றுலா தளமான கொல்லிமலையில் இருக்கும் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் மழைக்காலத்தையொட்டி தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. 



நீர்வீழ்ச்சியில் இருந்து கொட்டும் நீரை தொலைவில் இருந்து பார்க்கும்போது, வானத்தில் இருந்து வெள்ளியை உருக்கி ஊற்றினால் எப்படியான காட்சி இருக்குமோ .... அப்படி இருக்கிறது. டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் வெகுவாக ரசித்துள்ளனர். அடுத்தாக நாமும் கொல்லிமலை டூர் போட்டு, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்துவிட வணேடும் என கமெண்டும் அடித்துள்ளனர்.


மேலும் படிக்க | தாய் மசாஜ்லாம் வேஸ்டு.. நாய்க்கு பூனை செய்யும் மசாஜ் தான் பெஸ்டு.. வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ