கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெறும் "ஒரே ஒரு" பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். 



முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் "எதுவரையோ" என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டனர். பின்னர் இப்படத்தின் இரண்டவாது பாடலான "கல்யாண வயசு" எனும் பாடலினை கடந்த மே 17-ஆம் நாள் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த இருப்பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.


இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான "ஒரே ஒரு" எனும் படலினை கடந்த ஜூன் 14-ஆம் நாள் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இப்பாடலானது தற்போது யூடியுபில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் அனிரூத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..