கணவருக்காக புதிய அவதாரம் எடுக்கும் நஸ்ரியா!
நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்’ஆகிய படங்களில் நடிகை நஸ்ரியா நடித்து உள்ளார்.
நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்’ஆகிய படங்களில் நடிகை நஸ்ரியா நடித்து உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பதை விட்டு விட்டார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி மேனன் இயக்கத்தில் நஸ்ரியா நடிப்பதாக கூறப்பட்டது. அவருடன் இணைந்து பிருத்வி ராஜ் மற்றும் பார்வதி ஆகியோரும் நடிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தனது கணவர் பஹத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் நஸ்ரியா. அமல் நீரத் இயக்கும் இந்தப் படத்தில், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கிவிட்டதாக தெரிகிறது.