நாட்டுக்கு நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அதிகமாக தேவை: ப்ரியங்கா ட்வீட்
இந்த உலகத்திற்கு முன்பை விட இப்போதுதான் நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அதிகமாக தேவை. உண்மை, அன்பு மற்றும் சுதந்திரத்துக்கான முன்மாதிரி அவர்.
நிற வெறி இனத்தவர்களுக்கு எதிராக அமைதியான முறையில் போரடி 27 ஆண்டுகள் கொடூர சிறை தண்டனை பெற்று கருப்பின மக்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்த நாள் இன்று...!!
27 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு 1990 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து போராடி இறுதியில் 1994 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார். நேரு சமாதான விருது, பாரத ரத்னா விருது, அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை நெல்சன் மண்டேலா பெற்றுள்ளார்.
இன்று உலகம் முழுவதும் நெல்சன் மண்டேலாவின் 101_வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின் பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்........,
"இந்த உலகத்திற்கு முன்பை விட இப்போதுதான் நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அதிகமாக தேவை. உண்மை, அன்பு மற்றும் சுதந்திரத்துக்கான முன்மாதிரி அவர்.
எனக்கு அவர் நெல்சன் மாமா (நான் அரசியலுக்கு வந்தால் மற்றவர்களைவிட சிறப்பாக ஏதாவது செய்வேன் என்று நம்பியவர்). அவர் எப்போதுமே எனக்கு முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்" எனப் பதிவிட்டுள்ளார்.