’வண்டிக்கு பதிலா போட் வாங்குங்கோ மக்களே’ காரணம் இது தான்; வைரல் வீடியோ
அண்மைக்காலமாக பெய்து வரும் கனமழை காரணமாக, இனி வரும் காலங்களில் வண்டிக்கு பதிலாக ஒவ்வொருவரும் போட் வாங்கியாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.
அண்மைக் காலமாக பெய்து வரும் பெரு மழையால் நகரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது வாடிக்கையாக மாறிவிட்டது. சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் வெளியேறுவதற்கான கட்டமைப்பு இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நகரப் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கு கட்டமைப்பு உள்ளிட்ட பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. உதாரணமாக, அண்மையில் பெங்களுருவில் பெய்த மழையால், நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஐடி நிறுவனங்கள் இருக்கும் இடமெல்லாம் தண்ணீர் வெள்ளம் போல் பாய்ந்தோடுகிறது.
மேலும் படிக்க | காதலியின் கால்களைப் பிடித்துக் கெஞ்சிய காதலன்.. என்ன நடந்தது - Viral Video
பல நிறுவனங்களின் ஊழியர்கள் ஐடி நிறுவனம் பகுதியைவிட்டு டிராக்டர்களில் வெளியேறுவதைக் கூட பார்க்க முடிந்தது. சிலர், டிராக்டர்களைப் பயன்படுத்தி வேலைக்கு சென்றுள்ளனர். இத்தகைய அவல நிலைக்கு முறையான திட்டமிடல் இல்லாமல் மேற்கொண்ட அடிப்படை கட்டமைப்புகளே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதேபோல் சென்னையிலும் பெரு வெள்ளத்தின்போது வீடுகள் நீரால் மூழ்கி, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுஒருபுறம் இருக்க சுற்றுச் சூழல் காரணமும் கூறப்படுகிறது. ஆர்டிக் பிரதேசங்களில் ஏற்பட்டு வரும் பனிக்கட்டி உருகுதல் வேகமாக இருப்பதால், காலநிலை மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெப்பம் அதிகரித்து பனிக்கட்டிகள் உருகுவது பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், ஏற்படும் கால நிலை மாற்றமே அதிக மழைப்பொழிவுக்கும் திடீர் வறட்சிக்கும் காரணம் என சுட்டிக்காட்டுகின்றனர் சூழலியலாளர்கள். இதனைக் உலக நாடுகள் கட்டுப்படுத்தாவிட்டால், மழைநீருடன் வாழ பழகிக் கொள்ள வேண்டிய காலகட்டம் வரும் என எச்சரிக்கின்றனர். அப்போது, வாகனங்களுக்கும், பெட்ரோல் டீசலுக்கும் அதிக தேவை இருக்காது என கூறும் அவர்கள், அனைவரும் போட் வாங்கி வைத்து ஓட்டிச் செல்ல வேண்டிய நிலை தான் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | மாஸா பீடி பிடித்து பிலிம் காட்டும் தாத்தா: வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ