தென்னிந்தியாவில் இந்தியை திணித்தால் இவ்வாறு தான் நடக்கும்... வைரலாகும் புகைப்படம்!
தோசை மாவு பாக்கெட்டின் புகைப்படம் ஒன்று கடந்த சில தினங்களாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தோசை மாவு பாக்கெட்டின் புகைப்படம் ஒன்று கடந்த சில தினங்களாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இணைய பதிவுகளுக்கு லைக்ஸ் வாங்க பலரும் திணறி வரும் இந்த காலக்கடத்தில் ஒரு சிறு தோசை மாவு பாக்கெட் எப்படி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என நீங்கள் வியப்பில் ஆழ்ந்து போகலாம். ஏனெனில் இந்த தோசை மாவு பாக்கெட் பிரபலமாவதற்கு காரணமும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை, என்றபோதிலும் இந்த மாவு பாக்கெட் தான் தற்போது இணையவாசிகளின் ட்ரண்டிங்க் கருவி.
சரி, அந்த மாவு காக்கெட்டில் அப்படி என்ன இருந்தது?
வேறு என்ன? மாவு பாக்கட்டில் அச்சிடப்பட்டிருந்த வார்த்தைகள் தான். உண்மையில் அந்த மாவு பாக்கட்டில் மூன்று மொழிகளில் இட்லி/ தோசை ஈர மாவு என அச்சிடப்பட்டு இருந்தது. தமிழ், ஆங்கிலம் மற்றும் என மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது.
ட்விட்டர் பயனர் யூனாயிக் விஜயலட்சுமி என்பவர் பாக்கெட்டின் படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் பெரும்பாலான தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் ஒரு வரி மட்டும் இந்தியில் எழுதப்பட்டுள்ளது, அதுதான் நெட்டிசன்களை தற்போது சிதைத்துள்ளது. இந்த வரியில் 'பாலேபாஜ்(बल्लेबाज)' என்று குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தை இந்தியில் கிரிக்கெட் மட்டையாளரை குறிக்கும் சொல் ஆகும். மாவு பாக்கெட்டில் எப்படி மட்டையாளர் வந்தார் என்பதே பேச்சுப்பொருள்.
"தென்னிந்தியாவில் இந்தி திணிப்பின் விளைவு" தான் இந்த புகைப்படத்தின் வெளிப்பாடு என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
என்றபோதிலும் 'பாலேபாஜ்(बल्लेबाज)' என்றால் கட்டியா இருக்கிற திரவம் என்றும் பொருள்படும் என இந்தி மொழி நன்கு தெரிந்த நண்பர்கள் தெரிவிக்கின்றனர். அர்த்தம் எதுவாக இருந்தாலும், தற்போது இணையவாசிகளின் நேரத்தை கடக்க இந்த புகைப்படம் உதவியிருக்கிறது.
படம் ஆன்லைனில் பகிரப்பட்டவுடன், அது வைரலாகியது. உண்மையில், இது சமூக ஊடக தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. ட்விட்டரில், இது 2.6k-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் 650-க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது.
பெருங்களிப்புடைய கருத்துக்களால் நெட்டிசன்கள் அதை ட்விட்டர் வெள்ளத்தில் மூழ்கடித்தனர். பலர் தங்களது சிரிப்பை நிறுத்த முயற்சிக்கையில், மற்றவர்கள் கூகிள் மொழிபெயர்ப்பை முட்டாள்தனமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.