500 Rupee Note Viral: உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்கள் ராமர் கோவில் திறப்பு விழா குறித்த எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், அன்றைய தினம் புதிய 500 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்து கடவுளான ஸ்ரீராமரின் புகைப்படங்களுடன் கூடிய புதிய 500 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வரும் ஜன. 22ஆம் தேதி அன்று வெளியிடப் போவதாகவும், அந்த ரூபாய் நோட்டில் ராமர் கோவிலும் இடம்பெற்றிருப்பதாக கூறி ஒரு புகைப்படமும் அந்த பதிவுடன் வைரலாகி வருகிறது. இந்த உண்மையா அல்லது வதந்தியா என்பதன் முழு விளக்கத்தையும் இங்கே காணலாம். 


காந்திக்கு பதில் ராமர்


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த, அயோத்தி ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீராமர் கோவிலின் படங்களுடன் கூடிய ரூ.500 நோட்டைப் பார்த்தால், தற்போது வழக்கமாக இருக்கும் ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டை இருக்கும் இடத்தில் அயோத்தி ராமர் கோவிலும், காந்தி இருக்கும் இடத்தில் ராமரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 


மேலும் படிக்க | வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் சொன்னது.. நாங்கள் செய்து காட்டியுள்ளோம் -பிரதமர் மோடி


ரிசர்வ் வங்கி வெளியிடுகிறதா


ஒருபுறம், இந்த நோட்டு வைரலாகி வருவதால் பலரும் இது உண்மை என நம்புகின்றனர். ஆனால், தற்போது வரை இந்திய ரிசர்வ் வங்கியால் ஸ்ரீ ராமர் படத்தைக் கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவது குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில், ஸ்ரீராமரின் படங்களுடன் வைரலாகி வரும் ரூ.500 நோட்டு போலியானது என்பது உறுதியாகும். 



இது போன்ற எந்த அறிவிப்பும் ரிசர்வ் வங்கியும் தரவில்லை என்றும் இது பொய்யான செய்தி என்றும் வங்கி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், ரிசர்வ் வங்கி இதுபோன்ற புதிய ரூ.500 சீரிஸ் நோட்டுகளை வெளியிடப்போவதில்லை என்பது தெளிவாகிறது.


ரிசர்வ் வங்கி முன்னரே கூறியது...


மகாத்மா காந்திக்கு பதிலாக வேறு சில படங்களுடன் 500 ரூபாய் நோட்டுகள் வரும் என்ற வதந்தி இது முதல் முறை அல்ல. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், தற்போதுள்ள ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றி ரவீந்திரநாத் தாகூர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே கலாம் ஆகியோரின் படங்களுடன் புதிய தொடர் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, இந்த செய்தியை ரிசர்வ் வங்கி அதனை முற்றிலுமாக. ரிசர்வ் வங்கியிடம் அப்படியொரு திட்டமே இல்லை என்று கூறியது.


மேலும் படிக்க | ஒவ்வொரு வீட்டிலும் ஸ்ரீராம ஜோதியை ஒளிரச் செய்யுங்கள் -பிரதமர் மோடி சிறப்பு வேண்டுகோள்
 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ