கடந்த 12 ஜூன், 2016 அன்று ஆர்லாண்டோ ஓரின சேர்க்கை இரவு விடுதியில் நனிநபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் நாற்பத்தொன்பது பேர் கொல்லப்பட்டனர், மேலும் 53 பேர் படுகாயம் அடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவீன அமெரிக்க வரலாற்றில் ஒரு தனி நபர் நடத்திய மிகக் கொடூரமான தாக்குதலாக இத்தாக்குதல் கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பிரபல பாப் இசை பாடகி மடோனா இசைப்பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


God Control என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைப் பாடலுக்கு ஆர்லாண்டோவின் இரவு விடுதியில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டை நினைவூட்டும் காட்சிகள் வரைகலை காட்சிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.



இந்த பாடலின் வரிகள் மற்றும் வீடியோ கூறும் கருத்துகளாக தெரியப்படுத்தப்படுபவை.,  "அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 36,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் துப்பாக்கி சூட்டால் கொல்லப்படுகிறார்கள், மேலும் 100,000 பேர் படுகாயம் அடைகின்றனர். இதற்கு முடிவு ஆயுதங்களுக்கான கட்டுப்பாடு தான்" 


என்னால் மாற்றக்கூடியது ஏதும் இல்லை என்பதை இனி நான் ஏற்கப்போவதில்லை. மாற்றத்தை குறித்து ஒருவர் பேசும்போது, பலர் சிரிக்க தான் செய்வர். ஆனால் மாற்றத்தின் பின்னர் மாற்றத்திற்கான பேச்சை குறித்து அனைவரும் புகழ்வர் என குறிப்பிடுகின்றார்.