இணையத்தை கலக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் புதிய புகைப்படங்கள்.....

இணையத்தில் வைரலாகும் சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தின் வெளிவராத புகைப்படங்கள் ஒரு பார்வை....
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தின் வெளிவராத புகைப்படங்கள் ஒரு பார்வை....
சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்க, மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துவருகின்றனர். மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
இந்த படத்திலிருந்து முதல் பாடலான ரெட் கார்டு பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்நிலையில் இந்த பாடல் தற்போது ரிலீஸாகியுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து, தற்போது வாங்க மச்சான் வாங்க பாடல் வெளியாகியது. இதையடுத்து, இப்படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படங்கள் அனைத்து படப்பிடிப்புத்தலத்தில் எடுக்கபட்டத்காவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பவன் கல்யாண், சமந்தா நடப்பில் வெளியான 'அத்தாரிண்டிக்கி தாரெட்டி' என்ற தெலுங்கு ஆக்ஷன் காமெடி படத்தின் ரீமேக் தான் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் என்பது குறிப்பிடத்தக்கது.