2 ஆண்டு சாதனையை விளக்கி கூறும் நியூசி., பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்..!
தனது ஆட்சியின் 2 ஆண்டுகள் சாதனைகளை 2 நிமிடங்களில் மூச்சுவிடாமல் விவரித்த நியூசி., பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்..!
தனது ஆட்சியின் 2 ஆண்டுகள் சாதனைகளை 2 நிமிடங்களில் மூச்சுவிடாமல் விவரித்த நியூசி., பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்..!
நியூசிலாந் பிரதமர் ஜசிந்தா ஆர்டென் தனது கட்சியின் 2 ஆண்டுகள் சாதனைகளை 2 நிமிடங்களில் மூச்சுவிடாமல் விரிவாக விளக்கும் வீடியோ ஓன்று இணையதளத்தில் வைரளாகி வருகிறது.
நியூசிலாந் லேபர் கட்சியின் 37 வயதுடைய இளம் தலைவரான ஜெசிந்தா ஆர்டன், நியூசிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த கொண்டாடத்தின் போது பிரதமர் அலுவலகத்தில் உள்ள சிலர், 2 ஆண்டுகளில் அவரது கட்சி செய்த சாதனைவகள் குறித்து வேகமாக விளக்கும் படி சவால் விடுத்துள்ளனர். இந்த சவாலை ஏற்ற ஜசிந்தாவும், கொஞ்சமும் யோசிக்காமல் சரளமாக தனது கட்சியின் 2 ஆண்டு சாதனைகளை 2 நிமிடங்களில் பட்டியலிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அரசு நியூசிலாந்தில் புதிதாக 92,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியது, 2,200 அரசு குடியிருப்புகளை கட்டியது, கார்பன் வெளியேற்றத்தை பூஜியமாக்குவது தொடர்பான மசோதா கொண்டு வந்தது, கைதிகள் எண்ணிக்கை குறைப்பு, நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம், பத்து வருடங்களில் முதல்முறையாக குற்றவாளிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம், போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம், பள்ளிக் கட்டணத்தைக் குறைத்து பெற்றோர்களின் டொனேஷனை தவிர்த்துள்ளோம், பிளாஸ்டிக் ஊக்குவிப்பை தவிர்த்துள்ளோம் என அவர் பட்டியலை தொடர்ந்துகொண்டே செல்கிறார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி, டிரெண்டிங் ஆகி வருகிறது. எந்தவித குறிப்புக்களும் இன்றி கேமராவை பார்த்தபடி ஜசிந்தா சாதனைகளை பட்டியலிடும் இந்த வீடியோ 2.3 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஜசிந்தா தனது சாதனைகளை பட்டியலிட எடுத்துக் கொண்ட நேரம் 2 நிமிடம் 56 விநாடிகள். இந்த வீடியோவிற்காக ஜசிந்தாவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.