பாம்பை பயப்படாமல் பிடித்து பத்திரமாய் புற்றுக்குள் விட்ட சிறுமி!
4 வயது சிறுமி பாம்பை பயப்படாமல் கையால் பிடித்து அதனை பத்திரமாக பாம்பு புற்றுக்குள் விட்ட திகிலான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஷத்தன்மை கொண்ட பாம்பை பார்த்தால் பலரும் பயந்து நடுங்குவார்கள், செத்த பாம்பை பார்த்தால் கூட சிலருக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துவிடும் அந்த அளவிற்கு பலரும் பாம்பின் மீது பயம் இருக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்கிற பழமொழியும் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. பாம்பை கண்டு பலரும் நடுங்குவது ஒருபுறமிருக்க, ஒரு சிலர் பாம்பை கண்டு பயப்படாமல் அதனுடன் தைரியமாக விளையாடுவார்கள். அதேபோல இங்கு 4 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி பாம்பை தைரியமாக பிடித்து புற்றுக்குள் விடும் காட்சி பலரையும் அச்சத்தில் உறைய செய்துள்ளது.
மேலும் படிக்க | கர்ஜனையால் காட்டை உலுக்கும் சிங்கம்
குன்னூரில் உள்ள உபதலை ஆலோரை என்கிற பகுதியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினரின் நான்கு வயது மகள் ஸ்ரீ நிஷா தான் இந்த துணிச்சலான காரியத்தை செய்தவர். சம்பவம் நடந்த அன்றைய தினம் சிறுமி ஸ்ரீ நிஷா வீட்டில் விளையாடி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக கருப்பு நிறத்தில் சுமார் நான்கடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று அந்த சிறுமியின் வீட்டு வாசல் பகுதியில் வந்துள்ளது. பாம்பை கண்ட அப்பகுதி மக்கள் பயத்தில் இருந்தனர், திடீரென்று அந்த சிறுமி சிறிது அச்சம் கூட இல்லாமல் அந்த பாம்பை தனது கையால் பிடித்து தூக்கி இருக்கிறார்.
சிறுமி பாம்பை கையில் வைத்திருக்கும் காட்சியை பார்த்த குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் பதற்றத்துடனும், பயத்துடனும் இருந்துள்ளனர். ஆனால் அந்த சிறுமியோ சாதாரணமாக ஒரு விளையாட்டு பொருளை எடுத்து செல்வது போல் நேராக பாம்பு புற்று இருக்கும் இடம் நோக்கி நடந்து சென்று அந்த பாம்பை பத்திரமாக புற்றுக்குள் விட்டுவிட்டார். இதனை சிலர் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது. மேலும் சிறுமியின் துணிச்சலான இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க | 'ப்பா...' என வாய் பிளக்க வைக்கும் டான்ஸ்: இணையத்தை கலக்கும் பெண்ணின் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR