வடக்கு கரோலினாவை சேர்ந்த சிறுவன் ஒருவனின் நீச்சல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளம், குட்டைகள் ஆனாலும் சரி... நீச்சல் குளமானாலும் சரி.. நண்பர்களுடன் நீச்சல் அடித்தால் அலாதி மகிழ்ச்சி தான். ஆனால் இங்க 1 வயது சிறுவன் ஒருவன் தன் குடும்பத்தாருடன் நீச்சல் அடிக்க குளத்தில் குதிக்கும் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம் அவர் டைவ் அடிக்கும் ஸ்டைல் தான்...


கரோலினாவின் காஷ்னோவாவை சேர்ந்த கோரினா என்பவர் இந்த வீடியோவினை தனது முகப்புத்தகத்தில் கடந்த ஜூலை 15-ஆம் நாள் பதிவேற்றியுள்ளார். நீச்சல் குளத்தில் குதிக்க காத்திருக்கும் 3 நபர்கள் 1,2,3... என கூறி குளத்தில் குதிக்க சிறுவன் பொறுமையாக காத்திருந்து குளத்தில் குதிக்கின்றார், தன்னை அறியாமல் சற்றே தடுமாற்றத்துடன் குதிக்கும் இந்த வீடியோ பார்ப்பவர்களை ஒருநெடி அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் அடுத்த நொடியில் நகைச்சுவை கடலில் தள்ளி விடுகின்றது.


வெறும் 19 நொடிகள் மட்டுமே ஒளிப்பரப்பாகு இந்த வீடியோவானது இதுவரை 6.8 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது., அதே வேலையில் 65000 பேர் இந்த வீடியோவினை தங்களது பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.....