உலக அளவில் பிரபலமான தொலைகாட்சி தொடர் வீடியோவினை, பாலியல் சாயம் பூசி தடை செய்துள்ளது நார்வே தொலைக்காட்சி அமைப்பு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் வெளியான நோர்வே தொலைக்காட்சி தொடர் ஒன்றின் வீடியோ, இணையத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. மொழி தடை இருந்த போதிலும் இந்த வீடியோவிற்கு உலக அளவில் ரசிகர்கள்கள் கூட்டம் குவிந்தது. இதில் பெரும்பான்மை மக்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களின் அடுத்த பகுப்பாய்வு, நோர்வே மொழி பேசும் மினி-சீரிஸின் "டம்பா" ("டம்பட்") எபிசோடால் வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்தது தெரியவந்தது.


350 மில்லியன் காட்சிகளைக் கவர்ந்த இந்த வீடியோவில், இராணுவ விடுப்பில் ஒரு இளைஞன் மற்றும் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவனது காதலி இடையே நடைபெறும் ஒரு துன்பகரமான காதல் காட்சி இடம்பெற்றுள்ளது.


ஒரு இளம் ஜோடி, நீண்டதொரு இடைவெளிக்கு பின்னர் சந்திக்கும் போது நிகழும் தனிப்பட்ட விடயங்களை சற்று வெளிப்படையாகவே படக்குழுவினர் காண்பித்துள்ளனர். இந்த காட்சியில் வரும் இளம் ஜோடி ஒரு கட்டத்தில் உள்ளாடைகளை மட்டும் அணிந்துக்கொண்டு நடிப்பது போன்ற காட்சிகளும் இடம்பிடித்துள்ளது. பல லட்சம் நிரந்திர பார்வையாளர்களை கொண்டுள்ள இந்த தொலைகாட்சி இத்தகையான அரை நிர்வாண காட்சிகளை வெளிப்படையாக காட்டுவதா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


காரணம் இந்த காட்சி "கொஞ்சம் வேடிக்கையாகவும், கொஞ்சம் இனிமையாகவும், நிச்சயமாக சற்று வருத்தமாகவும்" அமைக்கப்பட்டுள்ளது என கருதப்படுவதால் தான்.


மொழி தடை இருந்த போதிலும் இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் துருக்கி போன்ற தொலைதூர நாடுகளிலிருந்து இந்த வீடியோவினை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். மொத்த பார்வைகளில் 39 சதவீதம் இந்தியாவில் இருந்து மட்டுமே என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click here to see video 


இதற்கிடையில் உலக அளவில் பார்வையாளர்களை சென்றடைந்த இந்த வீடியோ பல நாடுகளில் கலாச்சாரத்திற்கு எதிராக இருப்பதாக கூறி, இந்த வீடியோவிற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து இந்த வீடியோவினை நார்வே தொலைகாட்சி அமைப்பு தடை செய்துள்ளது...


சரி., நாம் இந்த வீடியோவில் வரும் கதை பற்றி சற்று அறிந்துக்கொள்வோம்... மியா என்ற பெண், நீண்ட நாட்களுக்கு பின்னர் குறைகால விடுப்பில் வரும் தனது காதலனை சந்திக்கின்றார். ஒருவருக்கொருவர் தங்கள் பாசத்தை பரிமாறிக்கொள்கையில், தனது காதலன் இராணுவத்தில் இருக்கையில் பாலியல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற நாடு திரும்பியிருப்பது கண்டு அதிர்ச்சியடைகின்றார். இந்த வீடியோ தற்போது பல லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.