குழந்தை பருவத்தில் நாம் அனைவருக்கும் ஏதேனும் ஒரு மிருகத்தின் குனாதியங்கள் கொண்டு வளர்ந்திருப்பதை நாம் உணர்ந்திருப்போம், இந்த குனாதிசியம் நாம் வளர்ந்த பின்னரும் இருந்துவிட்டால்?...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவ்வாறு தான் நிகழ்ந்துள்ளது நார்வே நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு. அலாய் கிறிஸ்டின் என அடையாளம் காணப்படும் இவர் குதிரையின் நடை, ஓட்டம் போன்ற குனாதியங்களை அச்சு அசலாய் பெற்றுள்ளார். இவரது ஓட்டத்தினை கண்டு இணையத்தில் இவருக்கு குவிந்துள்ள ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.


குதிரை பந்தையத்தில் ஓடும் குதிரையை போல் குதிக்கும் அலாய் கிறிஸ்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது அபார குதிக்கும் திறனை வெளிப்படுத்தி வருகின்றார். அதேப்போல் தனது ட்விட்டர் பக்கதிலும் பகிர்ந்து வருகின்றார். இதன் மூலம் இணையவாசிகளில் தனக்கென ஒரு தனி பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் கிறிஸ்டின்.




இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை 8 வீடியோக்கள் மட்டுமே பதிவிடப்பட்டுள்ள நிலையிலும் இவரது வீடியோக்கள் ஒவ்வொன்றும் சுமார் 25000 பார்வையாளர்களை எட்டி வருகிறது. 


இதுகுறித்து அலாய் கிறிஸ்டின் தெரிவிக்கையில்., தான் 4 வயது முதல் இவ்வாறு குதிக்கும் பயிற்சியில் ஈடுப்பட்டு வருவதாகவும், சிறுவயது முதல் குதிரை, நாய்குட்டி மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக அவைகளை போல் குதித்து விளையாடி வருகின்றேன். தற்போது எனது திறமைக்கு அங்கிகாரம் கிடைத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.