தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, தற்பொழுது ட்விட்டரில் #NoToJaiShriRam என்ற ஹாஸ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் பைக் திருடியதாகக் கூறி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மீது தொடர்ந்து 7 மணி நேரம் 11 பேர் கொண்ட ஒரு கும்பல் ‘ஜெய் ஸ்ரீராம்’ கூற சொல்லி தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த கும்பல் தாக்குதல் நடத்தியதில் தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லீம் உயிரிழந்தார். நாளுக்கு நாள் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் மதவாதக் கும்பல் தான் எனக் கூறப்படுகிறது. 


ஜார்க்கண்ட் மாநிலத்தின் வன்முறை நடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், ‘ஜெய் ஸ்ரீராம்’  என்ற கோஷத்துக்கு எதிராக ட்விட்டரில் #NoToJaiShriRam என்ற ஹாஸ்டாக் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஹாஸ்டாக் தற்பொழுது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.