நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள ஒத்த செருப்பு -7 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பார்த்திபன், கடைசியாக 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'ஒத்த செருப்பு - 7' என்கிற வித்தியாசமான தலைப்புடன் கூடிய படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார்
 
எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பவர் பார்த்திபன். எனவே, திரையில் காட்சிகளை புதுமையாகவும், வித்தியாசமாகவும் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. அந்தவகையில் தற்போது அவர் இயக்கி நடித்து வரும் படம் ‘ஒத்த செருப்பு -7’ வித்தியாசமான கதையை அடிப்படையாக கொண்டதுதான். திரைப்படம் முழுவதும் அவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார்.


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரைலர் வீடியோவினை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்ரைலரில் அவரது முந்தைய‌ படைப்பான 'குடைக்குள் மழை' படத்தை போன்று இருட்டு அறையில் பார்த்திபன் மட்டும் தனியாக 'அந்நியன்' பட பாணியில் பேசி நடித்துள்ள காட்சிகள் இடம் பிடித்துள்ளன. இந்த ட்ரைலர் படத்தின் கதையை ஒரளவு பிரதிபலிக்க கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.



இந்த படத்திற்கு இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு- ராம்ஜி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சிறப்பு சப்தங்கள் சேர்த்துள்ளார்.