நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் teaser-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் பிளிம்ஸ் மற்றும் டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் firstLook போஸ்டரினை படக்குழுவினர் கடந்த நவம்பர் 6-ஆம் நாள் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலானது.


FirstLook போஸ்டர் வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் teaser-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


நடிகர் விக்ரமின் 56-வது படமான இப்படத்தில், கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.



'கடாரம் கொண்டான்' என்றால் என்ன?.....


தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் - திரிபுவனமா தேவி தம்பதியருக்கு மகனாய் பிறந்தவர் ராஜேந்திர சோழன். இவரது ஆட்சிக்காலமான கி.பி. 1012- 1044 காலக்கட்டத்தில் கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவருக்கு 'கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.


தற்போது வெளியாகியுள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் teaser, படத்தின் திரைக்கதை கடல் கடந்து வெற்றிகொள்ளும் நாயகனின் கதையாக இருக்கும் என தெரிவிக்கின்றது.