நடிகர் சாருஹாசன் நடிப்பில் விரைவில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் "தா தா 87". இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் இணைந்து நடிக்கும் திரைப்படம் "தா தா 87". நடிகர் கமலஹாசன் சகோதரர் சாருஹாசன் முதன்மை கதாப்பாத்திரம் ஏற்க அவருடன் ஜனகராஜ் இப்படத்தில் களமிரங்குகிறார். சாருஹாசனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ்-ன் பாட்டி சரோஜா நடிக்கின்றார். இவர்களுடன் கலக்கப்போவது யாரு புகழ் ஆனந்த் பாண்டி, ஜெனி பல்லவி, அனு லாவண்யா நடித்துள்ளனர்.


சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் 'அவ என் ஆளு' என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.


இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரினை படக்குழவினர் வெளியிட்டுள்ளனர்.