ஹிப்ஹாப்' ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ‘நான் சிரித்தால்’ திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த ட்ரைலர் ஆனது யூடூபில் ட்ரண்டிக் #1-ல் உள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் 'ஹிப்ஹாப்' ஆதி. இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை' போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இத்திரைப்படங்களை தொடர்ந்து அவருடைய நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'நான் சிரித்தால்'. 


இந்த திரைப்படத்தை இயக்குநர் ராணா இயக்க, 'தமிழ்ப்படம் - 2' பட புகழ் ஐஸ்வர்யா மேனன், ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 'அவ்னி புரொடக்‌ஷன்ஸ்' நிறுவனம் சார்பில், சுந்தர்.சி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங்கும் டப்பிங் பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.



இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழவினர் வெளியிட்டுள்ளனர்.


முன்னதாக இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தூம் தூம் என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். முன்னதாக 'எனக்கு பிரேக் அப்.. அதுல என் தப்பு' எனத் தொடங்கும் பாடலையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த பாடல்கள் இணையத்தில் சக்கைபோடு போட்ட நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி ஹிப்ஹாப் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


பொதுவாக இளைஞர்களின் காதல், காதல் தோல்வி, முன்னேற்ற முயற்சி போன்ற கதை களத்தை கையில் எடுத்து இளைஞர்களின் ஆதரவை பெற்றவர் ஆதி. அந்த வகையில் முன்னதாக இவர் நடிப்பில் வெளியான 'மீசைய முறுக்கு' படத்தில் இடம்பெற்றிருந்த 'வாடி புள்ள வாடி' என்னும் பிரேக்-அப் பாடல் மஹா ஹிட் அடித்தது. இந்த வரிசையில் தற்போது இந்த திரைப்படத்திலும் ஆதி 'எனக்கு பிரேக் அப்.. அதுல என் தப்பு' என்னும் பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.