வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகள் மற்றும் பறவைகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன. பொதுவாக நாய், பூனை, மாடு, குரங்கு, பாம்பு, புலி, சிங்கம் ஆகியவற்றின் வீடியோகளுக்கு அதிக மவுசு உள்ளது. அதுவும் குரங்கு வீடியோகக்ளை இணையன்வாசிகள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். 


குரங்கு ஒரு வனவிலங்கு என்றாலும், மனிதர்கள் வசிக்கும் இடங்களில் இவற்றை அதிகம் காண முடிகின்றது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். சமூக ஊடகங்களில் தினம் தினம் குரங்குகளின் சேட்டை வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை பார்க்க மிக கியூட்டாகவும், சிரிக்க வைக்கும் வகையிலும் உள்ளன. இந்த குரங்குகள் செய்யும் கோமாளித்தனத்தை பார்த்தால், கண்டிப்பாக நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது. ஆனால் சில சமயம் சொன்னதை அப்படியே செய்து, எந்த வித கலாட்டாவும் செய்யாமல் இருக்கும் குரங்கு வீடியோக்களையும் காண முடிகின்றது.


சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் மூதாட்டி ஒருவர் சூடாக சப்பாத்தி செய்து கொடுப்பதையும் அதை குரங்கு ஆசையாக சாப்பிடுவதையும் காண முடிகின்றது. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். 


வீடியோவின் துவக்கத்தில் வீட்டின் முற்றத்தில் உள்ள அடுப்பில் ஒரு பாட்டி சப்பாத்தி செய்துகொண்டு இருப்பதை காண்கிறோம். அவருக்கு பின்னால் உள்ள ஒரு உயரமான சுவரில் ஒரு குரங்கு அமர்ந்திருக்கிறது. பாட்டி சுடச்சுட சப்பாத்தி செய்துகொண்டிருக்கிறார். பாட்டியின் அருகில் அவரது பேரக்குழந்தைகளையும் காண முடிகின்றது. பாட்டி சப்பாத்தி செய்து, சூடாக ஒரு சப்பாத்தியை குரங்கிடம் கொடுக்கிறார். அதுவும் அதை வாங்கி சாப்பிடுகிறது.


வீடியோவில் பாட்டியும் பேரக்குழந்தைகளும் குரங்கிடம் பாசமாக பேசுவதையும் காண முடிகின்றது. மேலும், குரங்கை நடுவில் அமர வைத்து பேரக்குழந்தைகள் அதன் மீது பாசத்தை பொழிகிறார்கள். பாட்டியும் குரங்கை கனிவுடனும் ஆசையுடனும் தடவிக்கொடுக்கிறார். இவர்களது அன்பில் குரங்கு திக்குமுக்காடிப்போகிறது. 


மேலும் படிக்க | Viral Video: பாகுபலி ஸ்டைலில் மலைப்பாம்பை ஹாண்டில் செய்த தாத்தா - பேரன்... வியக்கும் நெட்டிசன்கள்!


பாட்டிக்கும் குரங்கிற்கும் இடையில் உள்ள உறவை காட்டும் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோவை காண மிக வித்தியாசமாக உள்ளது. பாட்டி தனது பேரக்குழந்தைகள் போல இந்த குரங்கின் மீதும் அன்பு காட்டுகிறார். பாட்டிக்கும் குரங்குக்கும் உள்ள இந்த தனித்துவமான உறவைப் பார்க்க மிக நெகிழ்ச்சியாக உள்ளது. 


வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ (Viral Video) சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் thar_desert_photography என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ரூ.20 லட்சம் மாலை.. இணையத்தை தெறிக்கவிட்ட ‘காஸ்ட்லி’ மாப்பிள்ளை, வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ