வைரல் வீடியோ: நாள் முழுவதும் வியர்வை சிந்தி உழைத்த பிறகு, அன்று சம்பாதித்த பணத்தை எண்ணும்போது நமக்கு கிடைக்கும் சந்தோஷம் அற்புதமான ஒரு உணர்வாகும். இருப்பினும், சிலருக்கு எவ்வளவு பணம் ஈட்டினாலும் மகிழ்ச்சி ஏற்படுவதில்லை. சிலரோ, தங்கள் உழைப்புக்கு ஏற்ற பணம் கிடைத்துவிட்டால், மனம் மகிழ்கிறார்கள். தேவைக்கு அதிகமாக இவர்கள் ஆசைப்படுவதில்லை. அப்படிப்பட்ட நியாயமான ஆசைகள் கொண்ட சிலரின் எளிமையும், நல்ல உள்ளமும் காண்பவர்களின் மனதைக் கவர்கிறது. இவர்களை பார்த்தால் மனதில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஒரு சேர ஏற்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டுள்ளது. இதில், தனது சக்கிளில் சின்ன தட்டு முட்டு சாமான்களை விற்பனை செய்யும் ஒரு முதியவர், சாலையோரம் உள்ள கடையில் அமர்ந்து, தான் நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை எண்ணுவதை காண முடிகின்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இந்த வீடியோவை சற்று கவனமாகப் பார்த்தால், அந்த ரூபாய் நோட்டுகளும் சில்லறை காயின்களும் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. அவரது முகத்தில் உள்ள முகபாவம் மற்றும் கைகளின் அசைவு மூலம் அந்த சிறிய தொகையும் அவருக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் அதை சம்பாதிக்க அவருக்கு இருக்கும் நிர்பந்தத்தையும் நாம் தெரிந்துகொள்ளலாம். ரூபாய் நோட்டுகளோ காயின்களோ கீழே விழுந்துவிடாமல் அவர் பார்த்து பார்த்து எண்ணுகிறார். அவரது இந்த செயல் நம்மை ஏதோ செய்கிறது. சிலருக்கு இதை பார்த்து குற்ற உணர்ச்சியும் ஏற்படலாம்!!


மேலும் படிக்க | கண் கலங்க வைக்கும் கணவன் மனைவி பாசம்: நெட்டிசன்களை அழ வைத்த வைரல் வீடியோ 


தேவை இல்லாமல் ஆடம்பர செலவுகளிலும் அவசியமற்ற செலவுகளிலும் பணத்தை வீணாக்கும் சிலர் இருக்கும் இதே உலகில்தான், ஒவ்வொரு ரூபாய்க்கும் தன் வியர்வை சிந்தி உழைத்து, சைக்கிளில் சென்று பொருட்களை விற்று, ஈட்டிய பணத்தின் அருமை அறிந்து செயல்படும் இப்படிப்பட்ட நபர்களும் இருக்கிறார்கள். இவர் முதுமை என்ற சாக்கை சொல்ல முடியாது. உழைத்து பழகிய உடம்புக்கு சாக்கு சொல்ல தெரியாது, சூழ்நிலையும் அதற்கு இடம் கொடுக்காது!! 


சம்பாதித்த பணத்தை எண்ணும் முதியவர் 



வைரலாகி வரும் இந்த உணர்ச்சிகரமான வீடியோவில், ஒரு முதியவர் தனது தினசரி சம்பாத்தியத்தை எண்ணுவதைக் காண முடிகின்றது. இந்த வீடியோவை 'ஜிந்தகி குல்சார் ஹை' என்ற பயனர் ட்விட்டரில், 'சம்பள நாள்’ என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். இந்த சிறிய வீடியோவில், ஒரு முதியவர் தான் பகலில் சம்பாதித்த பணத்தை ஒரு சிறிய கடையில் அமர்ந்து, நோட்டுகளையும் நாணயங்களையும் எண்ணிக் கொண்டிருப்பதை காண்கிறோம். வீடியோ எடுக்கபட்ட இடம் தெரியவில்லை. ஆனால் அவர் அமர்ந்திருக்கும் கடை ஒரு ஆற்றின் கரையில் இருப்பதை தெளிவாகக் காண முடிகின்றது. வீடியோவின் கடைசி வினாடியில் பணம் குறைவாக இருப்பது போல் முதியவருக்கு தோன்றுவதையும், அது தனது பாக்கெட்டில் உள்ளதா என அவர் அதை தட்டி பார்ப்பதையும் காண முடிகின்றது. 


வீடியோவைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட பயனர்கள் 


இந்த வீடியோ ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ மக்களை பல விதமான உணர்ச்சிகளில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பயனர், ‘கடவுள் இத்தகையவர்களுக்கு உதவட்டும். நமது தலைவர்களுக்கு மனித வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை புரியவைக்கட்டும்’ என்று எழுதியுள்ளார். 


மற்றொரு பயனரும் ஒரு உணர்ச்சிகரமான கதையைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது கமெண்டில், ‘சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு இ-ரிக்‌ஷாவில் சென்றேன். ரிக்‌ஷா ஓட்டியவரும் இந்த முதியவரின் வயதை ஒட்டியவர்தான். நான் அவரிடம் 20 ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். அவர் அதை நெற்றியில் தொட்டு முத்தமிட்டார். அவருடன் பேச முடியாத அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டேன். இவை சாதாரண விஷயங்கள்தான், ஆனால் இதுபோன்ற பதிவுகளை பார்த்தால், நான் நெகிழ்ச்ந்து அழுகிறேன்.’ என எழுதியுள்ளார். 


மேலும் படிக்க | ‘ஏம்மா...ஆவி கீவி புகுந்துடுச்சா?’: சமையலறையில் பெண் ஆடிய பேய் நடனம், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ