வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடன வீடியோக்களுக்கு இணையவாசிகளிடம் எப்போதும் சிறப்பான நாட்டம் இருக்கும். பல வித நடன வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதும் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நடனத்துக்கான ஒரு ஆர்வம் இருக்கும் என கூறுவார்கள். இதற்கு வயது வித்தியாசமோ, அந்தஸ்து வித்தியாசமோ, பதவி வித்தியாசமோ கிடையாது. வாய்ப்பு கிடைத்தவுடனேயே அனைவரின் உள்ளிருக்கும் டான்சரும் வெளியே வந்துவிடுகிறார். சிலர் யாருக்கும் தெரியாமல் நடனமாட விரும்புகிறார்கள், சிலரோ, அனைவருக்கும் மத்தியில், தங்கள் நடனத்தை துவக்கி விடுகிறார்கள். 


நமது நாட்டில் நடக்கும் பெரும்பாலான பொது விழாக்கள் மற்றும் குடும்ப விழாக்கள் நடனங்கள் இல்லாமல் நிறைவு பெறுவது இல்லை. இதில் வீட்டில் உள்ள முதியவர்களும் கலந்துகொண்டு பட்டையை கிளப்புவார்கள். இப்படி பல வீடியோக்களை நாம் இணையத்தில் பார்த்துள்ளோம். தற்போதும் இப்படி ஒரு விடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பாத்ரூமில் பாடி பட்டையை கிளப்பும் கிளி: வாய் பிளக்கு இணையவாசிகள், வைரல் வீடியோ


முதியவரின் பக்காவான பாம்பு டான்ஸ்


ஒரு கல்யாண ஊர்வலம் நடப்பதையும் அதில் அனைவரும் உற்சாகத்துடன் நடனமாடுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. டிஜெ இசைக்கு இளையவர்கள் நடனமாடிக்கொண்டிருக்க, இரு முதியவர்கள் ஒரு முடிவுடன் வருகிறார்கள். ஒருவர் தனது துண்டை வாத்தியமாக பயன்படுத்த, மற்றவர் பாம்பாக மாறி சாலையில் ஆடத்தொடங்கினார். இறுதியில் இருவருக்கும் இடையில் நடக்கும் விஷயம் காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.  முதியவர்கள் இருவரது உற்சாகவும், நடனத்தில் உள்ள ஆர்வமும் இந்த காலத்து இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவே அமைகிறது.


தாத்தாவின் பக்காவான பாம்பு டான்ஸை இங்கே காணலாம்: 



இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | டீச்சர் முன்னால் இப்படியா செய்றது? நீங்களே ஷாக் ஆய்டுவீங்க: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ