வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 


சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன.  பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியாத வகையில் உள்ள பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளன. தற்போது ராட்சத பாம்புடன் விளையாடும் ஒரு பெண்ணின் வீடியோ அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.


வீடியோவில் காணப்படும் காட்சிகள் காண்பவர்களை ஆச்சரியப்படுத்துகின்றன. சிறுமி மற்றும் பாம்பின் இந்த வீடியோவை குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கானோர் பார்த்து லைக் செய்துள்ளனர்.


பாம்பை பிடித்து இழுக்கும் மாஸ் சிறுமி 


சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில் சுமார் 15 அடி நீளமுள்ள ஒரு பாம்பு மைதானம் ஒன்றில் இருப்பதை காண்கிறோம். அப்போது சுமார் ஒன்றரை வயது கொண்ட சிறுமி அங்கே வருகிறார். பாம்பை பார்ப்பவர்கள், அடுத்த கணமே அந்த இடத்தை விட்டு ஓடுவது வழக்கம். ஆனால், இந்த குழந்தை பாம்பை பார்த்தும் பயப்படாமல் அருகில் செல்கிறார். பாம்பின் அருகில் சென்ற குழந்தை பாம்பை பிடித்து இழுக்கிறது. 


மேலும் படிக்க | ‘எனக்கும் வேலை கொடுங்க’: Mercedes-Benz ஆலையில் நுழைந்த சிறுத்தையின் வைரல் வீடியோ 


பாம்பு முன்னோக்கி செல்ல முயற்சிப்பதையும் சிறுமி அதன் வாலைப் பிடித்து இழுப்பதையும் வீடியோவில் பார்க்க முடிகின்றது. இந்த காட்சியை பார்க்க மிகவும் பிரமிப்பாக உள்ளது. 


அச்சமற்ற சிறு குழந்தையின் மாஸ் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகின்றது. இது snake._.world என்ற பெயரில் இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையவாசிகள் குழந்தையின் அசாத்திய துணிச்சலை வியந்து பாரடடி வருகிறார்கள். அந்த வீடியோ எப்போது, ​​எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.


மேலும் படிக்க | ’மாயாவி உலகம்’ மூச்சுவிடும் பூமியின் வைரல் வீடியோ - ஆனால் ஒரு டிவிஸ்ட் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR