இணையத்தில் நம்மால் நேரில் காணமுடியாத பல அரிய காட்சிகளும், நாம் நேரில் பார்க்கக்கூடிய அளவிலான காட்சிகளும் குவிந்துள்ளளது.  கிட்டத்தட்ட இணையத்தை சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒரு பெரிய உலகம் என்று கூட சொல்லலாம், அந்தளவிற்கு அதில் பல விஷயங்கள் நிரம்பியிருக்கிறது.  இணையதளங்களை சிலர் படிப்பிற்காகவும், வேலைக்காகவும், அறிவை பெருக்குவதற்கும் பயன்படுத்துகின்றனர்.  அதேசமயம் பெரும்பாலான மக்கள் இணையத்தை அவர்களது பொழுதுபோக்கிற்காக தான் பயன்படுத்துகின்றனர், அப்படி அதில் நமக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைவது விலங்குகளின் வீடியோக்கள் தான்.  அதிலும் குறிப்பாக அப்பாவி குழந்தைகளைப் போல, சில பூனைகளும் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு செய்யும் சேட்டைகள் எளிதில் மக்களை கவர்ந்துவிடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ


தற்போது அதுபோன்ற பூனை ஒன்றின் சேட்டை தான் இணையத்தில் பரவி பலரையும் ரசிக்க செய்துள்ளது. அந்த வீடியோவில் வெள்ளை நிறத்தில் கொழுகொழுவென்று ஒரு பூனை வேகமாக குடுகுடுவென்று ஓடுகிறது.  அது எங்கே ஓடுகின்றது என்று பொறுமையாக பார்த்தால் அது அந்த வீட்டின் அறையில் வைக்கப்பட்டுள்ள ஒரு குப்பைதொட்டியை நோக்கி ஓடுகிறது.  பின்னர் அந்த குப்பைத்தொட்டிக்குள் நீச்சல் குளத்தில் டைவ் அடிப்பது போல தலைகீழாக குதித்து அதற்குள் விழுந்துவிடுகிறது, அதனைத்தொடர்ந்து பொறுமையாக எழுந்து அந்த குப்பைத்தொட்டியினுள் அமர்ந்துகொண்டு வெளியேற முடியாமல் திருதிருவென குளித்துக்கொண்டு அங்குமிங்குமாக பார்த்து கொண்டு இருக்கிறது.  பூனையின் இந்த செயலை இணையத்தில் கண்ட இணையாவசிகள் பலரும் சிரித்து வருகின்றனர்.


 



பூனை பிரியர்கள் பலருக்கும் இந்த வீடியோ ரீவைண்ட் மோடில் ஓடிக்கொண்டிருக்கும், ட்விட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த காட்சியை இணையவாசிகள் பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.  இதுவரை இந்த வீடியோவை தொண்ணூற்று நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இணையாவசிகள் பார்த்து ரசித்துள்ளதோடு, இந்த வீடியோவிற்கு ஆறாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் மற்றும் கம்னேடுகள் குவிந்து வருகிறது.


மேலும் படிக்க | Viral News: 8 மனைவிகளுக்கும் ஒரு அரண்மனை; டைம் டேபிள் போட்டு காதல் செய்யும் நபர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ