பொதுவாக மனிதர்கள் சண்டைபோட்டுக்கொண்டாலே அவர்களது சண்டையை நிறுத்தி சமாதானப்படுவது மிகவும் ஒரு சவாலான டாஸ்க், சண்டை போட்டு கொள்பவர்களை விட சண்டையை விலக்க செல்பவர்களுக்கு அடி கொஞ்சம் பலமாக இருக்கும்.  அதுவே விலங்குகள் அடித்துக்கொண்டால் அவற்றை யாராலும் சமாதானம் செய்யமுடியாது, அவையே விலகிக்கொண்டால் மட்டும் தான் சண்டை தீர்ந்துவிடும்.  ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் நாயை மற்றொரு நாய் சென்று சமாதானம் செய்கிறது, அதாவது மனிதர்கள் எப்படி சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்வார்களோ அதேபோல அந்த நாய் சமாதானம் செய்வதை பார்க்கையில் ஆச்சர்யமாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ‘நானும் வரேன்..வெயிட் பண்ணுங்க’: திடீரென வண்டியில் பாய்ந்த சிங்கம், வைரலான வீடியோ 


இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரின் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், தெருவில் இரண்டு நாய்கள் நின்று உரத்த குரலில் குறைத்துக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றது, அப்போது மூன்றாவதாக ஒரு நாய் இருவரையும் சமாதானப்படுத்த முடியாமல் ஒரு நாயின் கழுத்துப்பட்டையை பிடித்து வாயால் இழுக்கிறது, அந்த நாய் மீண்டும் மீண்டும் எதிரியை நோக்கி குறைத்துக்கொண்டேயிருக்க, சமாதானம் செய்ய வந்த நாய் அதனை வேகமாக பிடித்து இழுத்து அந்த இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி வருகிறது.  பின்னர் அந்த நாய் தன்னால் முடியாமல் விட்டுவிட உடனே இரண்டு நாயும் அடுத்த சண்டைக்கு தயார் ஆவதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.


 



இந்த காட்சியை அந்த பகுதியில் சூழ்ந்திருந்த ஆர்வமாக பாத்துக்கொண்டு இருப்பதும் இந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.  இந்த வீடியோவை இதுவரை முப்பத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்திருப்பது மட்டுமல்லாது இந்த வீடியோவிற்கு பல லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.


மேலும் படிக்க | வீடியோ கால் பேசவிடாமல் தொந்தரவு செய்யும் பாய் பெஸ்டி பூனை! வைரல் வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ