வேண்டாம்.. டான்ஸ் மட்டும் பண்ணாதே: கெஞ்சிய நாய்.. விடாது ஆடிய நபர், வைரல் வீடியோ
Dance Viral Video: இப்படி ஒரு நபரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. இவர் செய்த வேலை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான நடன வீடியோக்களைப் பார்க்கிறோம். இதில் சில வீடியோக்கள் அட்டகாசமான நடன அசைவுகள், படைப்பாற்றல் மற்றும் வித்தியாசமான பாணி காரணமாக பயனர்களின் இதயங்களை வெல்வதைக் காண்கிறோம். இவற்றை மீண்டும் மீண்டும் பார்த்து பகிர்ந்து இணையவாசிகள் வைரலாக்குகிறார்கள்.
சமீபத்தில் அப்படியொரு நடன வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒருவர் நடனமாடுவதை காண முடிகின்றது. ஆனால், சரியாக அப்போது ஒரு நாய் அவரது காலையும் கடிக்கின்றது.
மேலும் படிக்க | ஹய்யயோ.. டாய்லெட்டுக்குள்ள இப்படியா.. விஷப் பாம்பின் வைரல் வீடியோ
பொதுவாக, தெருக்களில் அல்லது நம் பகுதியில் யாரை பார்த்தாவது நாய் குரைத்தாலோ, அல்லது பின்னால் துரத்தினாலோ, அந்த நபர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவது வழக்கம். ஆனால் இந்த நபரோ நாய் கடிக்கும்போதும் நாயை துரத்தவும் இல்லை, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடவும் இல்லை. அதற்கு பதிலாக அங்கேயே நடனமாடிக்கொண்டு இருக்கிறார். இது காண்பதற்கு மிக விசித்திரமாக உள்ளது. இதைப் பார்த்து அனைவரும் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான பயனர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு இதுவே காரணம்.
இந்த வைரலான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ரினால்டோ சோரெஸ் என்ற பயனர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், ரினால்டோ சோரெஸ் தனது தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நடனமாடுவதை காண முடிகின்றது. அப்போது ஒரு நாய் தொடர்ந்து அவரது காலை கடிப்பதையும் நக்குவதையும் காண முடிகின்றது. இதை பார்ப்பவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாகவும் அச்சமாகவும் உள்ளது.
மேலும் படிக்க | மானை பிடிக்க பதுங்கி பாய்ந்த சிறுத்தை..! ஸ்மார்ட் ஸ்கெட்ச் தப்புமா..- வைரல் வீடியோ
நாய் செய்யும் அட்டூழியத்தை இந்த வீடியோவில் காணலாம்:
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் reinaldooi என்ற பயனர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் 4 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமான பயனர்களால் இது விரும்பப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ரினால்டோ சோரஸின் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன.அவரது பெரும்பாலான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ