வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலைப்பாம்புகளுடன் மக்கள் மிக நெருக்கமாக இருப்பதையும் அவற்றுடன் விளையாடுவதையும் சமீப காலங்களில் அதிகம் கண்டு வருகிறோம். இது பற்றிய பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. எனினும், இவை சில சமயம் ஆபத்தாகலாம். குடிபோதையில் மலைப்பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு வசமாக மாட்டிக்கொண்ட நபரின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த நபர் ஒரு மீனவர். மீன் பிடிக்கச் சென்ற இவர், குடி போதையில் மீன் என நினைத்து மாம்பை பிடித்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.  


மீன்பிடிக்க சென்ற மீனவர்


இந்த மீனவர் மீன்பிடிக்கச் சென்றபோது இவை அனைத்தும் நடந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கர்வாவில் உள்ள கிடாசோதி குர்த் கிராமத்தில் நடந்துள்ளது. இங்கு 55 வயதான பிர்ஜலால் என்பவர் தனது மகனுடன் புய்யான் கிராமத்திற்கு அருகில் உள்ள கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.


மேலும் படிக்க | அணகோண்டா பாம்பிடம் சரமாரியாக கடிவாங்கிய நபர்; வைரல் வீடியோ 


கழுத்தை பிடித்துக்கொண்ட பாம்பு


இந்த நபர் மலைப்பாம்பை மீனாக நினைத்து பிடிக்க ஆரம்பித்ததாகவும், பின்னர் மலைப்பாம்பு அதன் வடிவத்தை காட்டி அந்த நபரின் கழுத்துப்பகுதியை பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது. குடிபோதையில் அந்த நபர் மலைப்பாம்புடன் விளையாடுவது வீடியோவில் தெரிகிறது. நிலைமை மோசமடையும் முன்னர், அந்த நபரின் மகன், தனது தோழனின் உதவியுடன் அவர் கழுத்தில் இருந்து பாம்பை அகற்றும் பணியில் ஈடுபடுகிறார். 


எப்படியோ ஆபத்தில் இருந்து வெளியே வந்தார்


நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அந்த மீனவர் இந்த பாம்பிடமிருந்து தப்பிக்க முடிந்தது. இந்த வீடியோ மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. அந்த நபர் மலைப்பாம்பிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள பல வகைகளில் முயற்சி செய்கிறார். ஆனால் மலைப்பாம்பு அவரது கழுத்தை முழுவதுமாக பிடித்து நெரிக்கத் தொடங்குகிறது. அந்த நபர் தனது மகனின் உதவியால், எப்படியோ ஆபத்தில் இருந்து வெளியே வருகிறார். 


பாம்பை மீன் என நினைத்து பிடித்த மீனவர்: திக் திக் வைரல் வீடியோ



இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு பல வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | சிங்கக்குட்டியை பிளான் போட்டு கடத்திய குரங்குகள்: சினிமாவை மிஞ்சும் சீன், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ