பாம்பை கண்டால் பயந்து போகாதவர்களைக் பார்ப்பது என்பது அரிது. அது எதுவும் செய்யாது என்று தெரிந்தாலும் கூட பயந்து நடுங்குபவர்கள் ஏராளம். இணையத்திலும் பாம்பு வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. பாம்புடன் விளையாடி வீடியோ போடுபவர்களுக்கு பண மழை கொட்டுகிறது. யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பாம்பு மற்றும் விலங்குகளுடன் விளையாடி வீடியோ போடுபவர்களின் எண்ணிகையும் அதிகம். இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ ஒன்றிலும் ஒருவர் பாம்புடன் ஜாலியாக விளையாடுகிறார்.ஆனால், பாம்பு அவரை சரமாரியாக கடிக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் படிக்க | Viral News: கையில் சுற்றிய நாகப்பாம்பை கடித்து குதறி கொன்ற 8 வயது சிறுவன்!
வழக்கமாக நாகப்பாம்பு உள்ளிட்ட பாம்புகளுடன் விளையாடும் நபர்களை பார்த்திருக்கிறோம். இந்த நபர் கொஞ்சம் வித்தியாசமாக அனகோண்டா பாம்பை பிடித்து வைத்து விளையாடுகிறார். அவர் பெயர் நிக். கவ்பாய் தொப்பியுடன் ஸ்மார்ட்டாக உடை அணிந்திருக்கும் அவர், ராட்சத அனகோண்டாவை கையில் வைத்திருக்கிறார். அந்த பாம்பு அவரின் உடலில் அங்கும் இங்கும் செல்ல முற்படுகிறது. அதற்கு அவர் அனுமதிக்காததால், உடனே நிக்கை கடித்துவிடுகிறது.
ஒருமுறை இருமுறை அல்ல, மூன்று முறை பாம்பு கடித்துவிடுகிறது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் திகிலடைந்துள்ளனர். ஆனால், பாம்புக்கு விஷம் இல்லை என்பதை நிக், அந்த வீடியோவில் கூறிவிடுகிறார். இதனால் பயப்படாமல் அவர் பாம்பை பிடித்து விளையாடுகிறார். வீடியோவை பார்த்து கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன் ஒருவர் “இதற்கு பற்கள் இல்லையா? விஷம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவற்றின் கடி மோசமாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார். இன்னொருவர், “பொய் சொல்ல மாட்டேன், நானாக இருந்தால் பாம்பு கடித்தவுடன் உடனே ஓடியிருப்பேன் என கூறியிருக்கிறார். இதுவரை இந்த வீடியோ 49 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. 515,000-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ