ஒருவரை உடனடியாக தொடர்புகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக கண்டுபிடிக்க போன் தற்போது பரிணாமம் அடைந்து பலவிதமான தொழில்நுட்பங்களுடன் கைக்கு அடக்கமாக ஸ்மார்ட்போன்களாக வந்துவிட்டது.  இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்வின் முக்கியமான ஒரு அங்கமாக மாறிவிட்டது எனலாம், ஏனெனில் இப்போதெல்லாம் அதனை சார்ந்து தான் நாம் வாழத்தொடங்கிவிட்டோம்.  ஸ்மார்ட்போன்கள் என்னதான் சில சமயம் நமக்கு நன்மையை அளித்தாலும், அது நம்மை முழுமையாக அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.  மனிதர்களை தான் ஸ்மார்ட்போன்கள் அடிமையாக்கி வைத்திருக்கிறது என்றால், அது தற்போது தவளைகளை அடிமைகளாக்கி வைத்திருக்கிறது என்பதை தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவின் மூலம் உணரமுடிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  அந்த வீடியோவில், ஆறு பெரிய தவளைகள் வரிசையாக அமர்ந்திருப்பதையும், அதற்கு நேரெதிரே ஒரு கல்லில் ஸ்மார்ட்போன் ஒன்று வைத்திருப்பதையும் பார்க்கமுடிகிறது.  அந்த ஸ்மார்ட்போனில் ஒரு வீடியோ ஓடிக்கொண்டிருக்கிறது, அந்த தவளைகள் அனைத்தும் அந்த வீடியோவை மிக ஆர்வமாக கண் அசைக்காமல் பார்த்து கொண்டிருக்கின்றன.  அப்போது அந்த ஸ்மார்ட்போனுக்கு சொந்தக்காரர் தனது போனை எடுக்க முயல்கிறார், உடனே கோவப்பட்ட தவளை ஒன்று அவரை அந்த ஸ்மார்ட்போனை எடுக்கவிடாமல் விரட்டுகிறது.  அவர் மீண்டும் மீண்டும் போனை எடுக்க முயலும்போது தவளை அவரை எடுக்கவிடாமல் செய்கிறது, இறுதியாக போனுக்கு காவல் இருப்பது போன்று அந்த ஸ்மார்ட்போனை வட்டமிட்டு தவளைகள் அமர்ந்துகொண்டு அந்த நபரை விரட்டியடிக்கின்றன.


 



மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!


இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை பலரும் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர், இதுவரை இந்த வீடியோவை அறுபத்தி ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு நான்காயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் பதிவிடப்பட்டு வருகின்றன.


மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ