வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான நடன வீடியோக்களைப் பார்க்கிறோம். இதில் சில வீடியோக்கள் அட்டகாசமான நடன அசைவுகள், படைப்பாற்றல் மற்றும் வித்தியாசமான பாணி காரணமாக பயனர்களின் இதயங்களை வெல்வதைக் காண்கிறோம். இவற்றை மீண்டும் மீண்டும் பார்த்து பகிர்ந்து இணையவாசிகள் வைரலாக்குகிறார்கள். 


சமீபத்தில் அப்படி ஒரு நடன வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் நடு ரோட்டில் நடனமாடுவதை பார்க்க முடிகின்றது. இப்படி பல வீடியோக்கள் இணையத்தில் இதுவரை பகிரப்பட்டுள்ளன. ஆனால், இந்த வீடியோ சற்று வித்தியாசமான வீடியோவாக உள்ளது. இந்த பெண் நடனமாட, சுற்றி பல நாய்கள் நின்று பெண்ணின் நடனத்தை வேடிக்கை பார்க்கின்றன. இது காண்பதற்கு மிக வேடிக்கையாக உள்ளது. 


இந்தி மொழியின் மிக பிரபலமான படமான ‘ஷோலே’-வில், ‘இன் குத்தோங் கே சாம்னே மத் நாச் வசந்தி’ என ஒரு பிரபல வசனம் உள்ளது. அதாவது, ‘இந்த நாய்களுக்கு முன்னால் ஆடாதே வசந்தி’ என இதற்கு பொருள். இந்த வீடியோவை பார்த்தால் அனைவருக்கும் அந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், இங்கு அந்த பெண் நாய்களுக்கு முன்னால் தான் நடனமாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Viral Video: பாம்பெல்லாம் எனக்கு பஞ்சு மிட்டாய் மாதிரி... நாகபாம்புடன் கொஞ்சி விளையாடும் நபர்!


நாய்களுக்காக நடன நிகழ்ச்சி நடத்திய பெண்


தற்போது பகிரப்பட்டுள்ள வீடியோவில், சாலையில் நாய்கள் கூட்டமாக இருப்பதை காண முடிகின்றது. அந்த இடத்துக்கு செல்லும் ஒரு பெண், அவற்றின் அருகில் சென்று நடனம் ஆடுகிறார். அக்‌ஷய் குமார் மற்றும் கத்ரீனா கைஃப் நடித்துள்ள வெல்கம் படத்தின் 'ஊஞ்சா லம்பா கதம்' பாடலுக்கு பெண் நடனமாடுகிறார். பெண் தெருவில் நடனமாடும் போது, ​​தெரு நாய்கள் கூட்டமாக அவர் அருகில் நிற்பதைக் காண முடிகின்றது. அந்த வீடியோவில் 5 நாய்கள் நின்று கொண்டு பெண்ணின் நடனத்தை ரசிப்பதை காண்கிறோம். அந்த பெண்ணும் அச்சமின்றி நாய்களுக்கு மத்தியில் அசால்டாக நடனமாடிக்கொண்டிருக்கிறார். நாய்கள் நடனம் ஆடும் பெண்ணையே உற்று நோக்குகின்றன.


நாய் கோபம் கொண்டால் என்ன ஆகும்?


இந்த வீடியோவை பார்க்கும் போது ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும், சமீபத்தில் பல்வேறு இடங்களில் நாய்கள் நடத்திய தாக்குதல்கள் பற்றி நாம் படித்துள்ள பல வித செய்திகளும் நமக்கு நினைவுக்கு வருகின்றன. அந்த வீடியோக்களில் காணப்பட்டது போல இந்த நாய்கள் திடீரென அந்த பெண்ணின் மீது பாய்ந்தால் என்ன நடக்கும் என்ற அச்சமும் ஒரு புறம் நம்மை பற்றிக்கொள்கின்றது. ஆனால், அந்த பெண்ணுக்கு அப்படிப்பட்ட பயம் எதுவும் இருப்பது போல தோன்றவில்லை. அவர் மிக கூலாக தனது ரசிகர்களை தனது நடன அசைவுகளின் மூலம் மகிழ்ச்வித்துக்கொண்டு இருக்கிறார்.


நடு ரோட்டில் நாய்களுக்கு மத்தியின் நடனமாடிய பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோவை பார்த்ததும் மக்கள் கொடுத்த வேற லெவல் ரியாக்‌ஷன்


இந்த வீடியோ பழையதாகத் தோன்றினாலும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. Zore_amol_ இன்ஸ்டாகிராமில் மறுபகிர்வு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு இப்போதும் ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


‘அந்த பெண் நாய்களுக்காகவே ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடத்துகிறாரா?’ என ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். ‘அவர் முகத்தில் துளி கூட அச்சத்தை காண முடியவில்லை.. தைரியமான பெண் தான்’ என மற்றொரு பயனர் பெண்ணை பாராட்டியுள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | வைரல் வீடியோ: அட பாவமே..! பேசிக் கொண்டிருப்பவரை தாக்கிய மின்சாரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ