வைரல் வீடியோ: இளைஞரின் சுருள் முடிக்குள் சிக்கிய பாம்பு..! என்ன ஆச்சு தெரியுமா?

இளைஞரின் சுருள் முடிக்குள் பாம்பு ஒன்று புகுந்து சிக்கிக் கொண்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. பார்ப்பவர்களையும் இந்த வீடியோ அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 11, 2023, 08:14 PM IST
  • தலைக்குள் சிக்கிய பாம்பு
  • இன்ஸ்டாகிராமில் வைரல் வீடியோ
  • இளைஞரின் சேட்டை வீடியோ வைரல்
வைரல் வீடியோ: இளைஞரின் சுருள் முடிக்குள் சிக்கிய பாம்பு..! என்ன ஆச்சு தெரியுமா? title=

செல்லப்பிராணிகளுக்கும், அதனை வளர்ப்பவர்களுக்கும் இடையே நடைபெறும் ஜாலியான விளையாட்டுகள் அதிகம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன. நாய், பூனை எல்லாம் செல்லப்பிராணிகளாக இருந்த நிலையில் இப்போது பாம்புகளும் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற வேடிக்கையாக வீடியோக்களும் சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்று வைரல் லிஸ்டிலும் இடம்பிடித்துள்ளன. அந்தவகையில் பாம்பு ஒன்று இளைஞரின் சுருள் முடிக்குள் சிக்கியிருக்கும் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மேலும் படிக்க | அந்த மனசுதாங்க கடவுள்: நெட்டிசன்களை பீல் பண்ண வைத்த குட்டி பையன், வீடியோ வைரல்

அவர் விளையாடுவதற்காகவே பாம்பை தலைக்குள் விட்டு வீடியோ எடுத்திருப்பதுபோல் தெரிகிறது. அதிகமான முடி வளர்த்து வைத்திருக்கும் இளைஞர், அதனுள் சிறிய பாம்பை எடுத்து விட்டிருக்கிறார். அது விளையாடுவதற்காக விடப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோவில் பாம்பு அந்த இளைஞரின் கையில் மீண்டும் சிக்கவில்லை. அப்படியே தலைமுடிக்குள் வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டே இருந்தது. சிறிய பாம்பு தான் என்றாலும் அது தலையில் ஊர்வதை அந்த இளைஞரும் வெகுவாக ரசிக்கிறார். பாம்பு தலையில் ஊரும்போது கூசும் சுகத்தை அவர் மிகவும் ரசிக்கிறார்போலும். devin_allen21 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றிருக்கிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Devin (@devin_allen21)

லைக்குகளையும் மட்டும் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டது பெற்றிருக்கிறது. அந்த வீடியோவில் கருப்பு டீ சர்ட் அணிந்து கொண்டு ஹேண்டசம் உடையில் இருக்கிறார். வெள்ளை நிறத்திலான பாம்பு தலையில் ஊர்க்கிறது. வீடியோவை பார்த்த எல்லோரும், இதென்னப்பா பாம்பை பிடித்து தலையில் விட்டு விளையாடிகிட்டு இருக்கிற.... இதெல்லாம் ஒரு விளையாட்டா என்று கேட்டுள்ளனர். பாம்பை எல்லாம் பிடித்து விளையாடுகிறார்களே எப்படி இவர்களால் முடிகிறது... ஐயோ சாமி என்னால் எல்லாம் முடியாதுப்பா என்று எழுதியிருக்கிறார் ஒரு நெட்டிசன். பாம்பை பார்த்தாலே பல கிலோ மீட்டர் தூரம் ஓடிவிடுவேன், இந்த பசங்க எல்லாம் தலையில் விட்டு விளையாடுறாங்களே என்று இதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும் சாமி என எழுதியிருக்கிறார். இதேபோல் ஆயிரக்கணக்கான கமெண்டுகள் அந்த வீடியோக்கள் கீழே பதவிடப்பட்டுள்ளன.  

மேலும் படிக்க | எவரெஸ்ட் சிகரத்தில் பனிபாறைகளுக்கு இடையே 200 அடி ஆழத்தில் சிக்கிய மலையேறும் வீரர்! மனதை பதற வைக்கும் காட்சிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News