மேடையிலேயே அவிழ்ந்த மணமகனின் பேண்ட்: மணமகளின் மாஸ் ரியாக்ஷன், வைரல் வீடியோ
Funny Wedding Video: பார்த்த உடனேயே நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. இது திருமணம் ஒன்றில் நடக்கும் கலாட்டாவின் வீடியோ ஆகும்.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன. திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன. சில சமயம் மேடையிலேயே மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையே சண்டை தொடங்கிவிடும். சில சமயங்களில் மணமக்களின் சகோதர சகோதரிகளுக்கு இடையே வேடிக்கையான சண்டைகளும் நடப்பதுண்டு. திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
இதுமட்டுமின்றி நினைத்து நினைத்து சிரிக்கும் வகையில் பல நிகழ்வுகளும் திருமணங்களில் நடக்கின்றன. சமீபத்திலும் ஒரு வேடிக்கையான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் மாலை மாற்றும் சடங்கு நடப்பதை காண முடிகின்றது. ஆனால், அப்போது மணமகனுக்கு நடக்கும் ஒரு விஷயம் அவரை மட்டுமல்லாமல் அனைவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறது.
மாப்பிள்ளைக்கு வந்த சோதனை
திருமணம் தொடர்பான இந்த வீடியோவில் மாலை மாற்றும் நிகழ்வின் போது எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கிறது. மணமகன் முதலில் மணமகளின் கழுத்தில் மாலை போடுகிறார். ஆனால் மணமகள் அவருக்கு மாலை அணிவித்தவுடன், அவரது பேன்ட் அழிந்திவிடுகிறது. ஆச்சரியம் என்னவென்றால், மணமகன் தனது பேண்ட் அவிழ்ந்து விழுந்ததை நீண்ட நேரத்துக்கு உணரவில்லை.
திருமணத்தின் வேடிக்கையான அந்த வீடியோவை இங்கே காணலாம்:
மாப்பிள்ளை அதை கவனித்த உடனேயே, அவர் ஓரமாக சென்று பேண்டை சரி செய்துகொள்கிறார். இந்த வீடியோவை பார்த்தவர்களால் தங்கள் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க |வைரல் வீடியோ: இரண்டு ராட்சத மலைப்பாம்புகளை வால் பிடித்து இழுக்கும் மனிதன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ