நான் சிங்கம்டா! வாலிபரை மிரள வைத்த குட்டி சிங்கம்! வைரல் வீடியோ!
சிங்கக்குட்டியுடன் ஒரு வாலிபர் கூலாக விளையாடும் சமயத்தில் அந்த சிங்கக்குட்டி திடீரென்று கர்ஜித்து அந்த வாலிபரை மிரட்டிவிடும் காட்சி இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாய், பூனை, முயல் போன்ற பிராணிகளை வீட்டில் வளர்ப்பது எளிதான ஒன்று, பலருக்கும் இதுபோன்ற வளர்ப்பு பிராணிகளை மிகவும் பிடிக்கும். ஆனால் காடுகளில் வாழக்கூடிய விலங்குகளை நாம் செல்லப்பிராணிகளாக வளர்க்க ஆசைப்படுவது கொஞ்சம் அபாயகரமான ஒன்றுதான். சிங்கம், புலி, கரடி போன்றவை ஆபத்தான மிருகம் அதேபோல அதன் குட்டிகளும் ஆபத்தானவை, சில சமயங்களில் இந்த விலங்குகளின் குட்டிகளை வனவிலங்கு பாதுகாவலர்களால் கூட பாதுகாக்க முடியாது, அப்படி இருக்கையில் சாதாரண மனிதர்களால் எப்படி அவற்றை அவ்வளவு எளிதில் கையாள முடியும். அளவில் சிறியதாக இருந்தாலும் அவை ஆபத்தான மிருகம் தான் என்பதை உணர்த்தும் வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | பாகனிடம் பாசமழை பொழியும் கியூட் யானை: வீடியோ வைரல்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாசித் அயன்-3748 என்கிற கணக்கு பக்கத்தில் மிரட்டலான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு இளைஞர் காரின் மீது இரண்டு சிங்கக்குட்டிகளை படுக்க வைத்திருக்கிறார், நாய்குட்டிகளை செல்லமாக தடவி கொடுப்பது போன்று ஒன்று சிங்கக்குட்டியை பாசமாக தடவிக்கொடுத்து கொண்டு வீடியோவுக்கு பெர்ஃபார்மன்ஸ் செய்து கொண்டு இருக்கிறார். பின்னர் மற்றொரு சிங்கத்தை தடவி கொடுக்க வந்ததும் அந்த சிங்கக்குட்டி திடீரென்று வேகமாக வாயை பிளந்து கர்ஜிக்க அந்த இளைஞர் பயந்துகொண்டு பின்னாடி செல்வதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.
குட்டியாக இருந்தாலும் அது சிங்கம் என்பதை உணர்த்தும் விதமாக அந்த சிங்கக்குட்டியின் செயல் அமைந்துள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவானது இதுவரை 3.9 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை தாண்டியுள்ளது மற்றும் இந்த வீடியோவுக்கு நூற்றுக்கணக்கான லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.
மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ