வனவிலங்குகளின் ஒன்றான கரடி இனங்கள் புத்திசாலியான விலங்கினங்கள் என்று குறிப்பிடப்படுகிறது, வடஅமெரிக்காவில் அதிகம் காணப்படும் இவற்றை மிகவும் திறமையான விலங்கு என மக்கள் போற்றுகின்றனர். மற்ற பாலூட்டி வகை விலங்குகளை காட்டிலும் கரடி இனங்கள் தான் புத்திசாலியான விலங்குகள் என்று கருதப்படுகிறது, கரடி எவ்வளவு புத்திசாலி விலங்கோ அதேபோல அவ்வளவு ஆபத்தான விளங்கும் கூட.  சில சமயம் விளையாட்டு தனமாக இருக்கும் கரடி இனங்கள் பல நேரங்களில் நமக்கு ஆபத்தாக மாறிவிடும் என்பதால் கரடிகளிடம் கவனமாக இருக்க வேண்டும், அதிலும் காடுகளில் கரடிகளிடம் தனியாக சிக்கிக்கொண்டால் நமது நிலைமை என்னவாகும் என்பதை தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு திகிலான வீடியோ நமக்கு காட்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்: வியப்பில் நெட்டிசன்கள், வீடியோ வைரல


தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் தனியாக அகப்பட்டு கொண்ட ஒரு மனிதனை கரடி தாக்க முயல்கிறது, இந்த காட்சியை வழிப்போக்கர் ஒருவர் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.  அந்த வீடியோவில் மரத்தின் மீது ஒரு நபர் ஏறிக்கொண்டு இருக்கிறார், அவரை தாக்க கரடியும் மரத்தின் ஒரு பக்கம் ஏறிக்கொண்டு இருக்கின்றது, அந்த நபர் மரண பயத்தில் அலறிக்கொண்டு இருப்பது வீடியோவை பார்க்கும்போது நன்கு தெரிகிறது.  இந்த வீடியோவை பதிவு செய்த வழிப்போக்கராலும், ஆபத்தில் இருக்கும் நபரை காப்பற்ற முடியாது, ஏனெனில் இவர் காப்பாற்ற முயன்று வண்டியை விட்டு இறங்கினாலோ அல்லது ஹார்ன் அடித்தாலோ இவரை கரடி தாக்க தொடங்கிவிடும் என்கிற பயத்தால் அந்த நபர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிடுகிறார்.


 



இணையத்தில் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த நபரின் நிலையை எண்ணி கவலைகொண்டு இருக்கின்றனர்.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் யாரேனும் தனியாக அகப்பட்டுக்கொள்வதை நினைத்து பார்த்தாலே பயமாக இருக்கிறது.  இந்த அச்சுறுத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | RRR 'நாட்டு கூத்து' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜப்பானிய யூடியூபர்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ